6.கொடூரமான இவான்
உலகின் மோசமான ஆட்சியாளர்களில்
இந்த மனிதனும் ஒருவன்
இவரின் பெயர் ; .. Ivan the Terrible,
கொடூரமான இவான்
பெயரிலையே கொடூரத்தை வைத்துள்ளான் என்றால்
எப்படி என்று பார்த்துகொள்ளுங்கள் .....
இவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்
காரணம் உலகின் மிக கொடூரமான நபர்களின் பட்டியலில் இந்த இவானும் ஒருவர் .....
இவர் வாழ்க்கை சம்பந்தமாக தமிழில் யாரும் சொல்வது இல்லை ...
எப்ப பார்த்தாலும் ஹிட்லர் மொசலினி போன்றவர்களையே சொல்லி அவர்கள் மட்டுமே கொடூரமானவர்கள் என்று காண்பிக்கிறார்கள் ...
ஹிட்லரை விட கொடூரமான ஆசாமிகள் இந்த உலகில் வாழ்ந்து விட்டு தான் போய் இருகின்றனர் ....
இப்பொழுது இந்த இவான் என்று சொல்ல கூடிய கொடூரமான மன்னனின் சில விஷயங்களை மட்டும்
தொடர் பதிவாக பாப்போம்..
1533 முதல் 1547 வரை ரஷ்யாவை ஆட்சி செய்தவன் ,,,
ஒரு மனநலம் பாதித்த மன்னன் இருந்தால் என்ன ஆகுவார்கள் மக்கள் என்பதற்கு இந்த இவான் ...சாட்சி
இவர் பயித்தியகாரரா அல்லது சைக்கோ போன்ற சீரியல் கில்லரா என்று அறிஞர்கள் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் உண்டு ...
அந்த அளவிற்கு மோசமான மனிதர் ....
உயிருடன் துடிதுடிக்க கொலை செய்வதற்கென ஒரு குழுவை வைத்து இருந்தார் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் ..
அப்படி கொலை செய்பவர்களை பார்த்து ரசித்து கொண்டே உணவு அருந்துவது தான் அலாதி பிரியம் இவருக்கு ...
மற்றும் டார்ச்சர் செய்து கொள்வதற்கென்று புதிது புதிதாக கருவிகளை உருவாக்க சொன்னவர் ...
அதே வேலையில் தனது ஆட்சியை பரப்புவதில் கில்லாடி
அந்த காலத்திலையே 4,046,856 மில்லியன் அளவிற்கு தனது ஆட்சியை நிலை நாட்டியுள்ளான் என்றால்
அதன் கொடூரத்தை உணர்ந்து கொள்ளுங்கள் ..
இன்று ரஷ்யா இவ்வளவு பெரிய நாடாக இருப்பதற்கு இந்த இவான் மட்டுமே காரணம் ...
தனது சிறியவயதில் பூனையை மேலிலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி எரிவது ...
பறவைகளை அறுத்து கிழிப்பது போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருந்துள்ளார் ...
அதே போன்று ஆட்சியில் அமர்ந்த பிறகு தன் பேச்சை கேட்காத மக்களை அறுத்து கிழிக்க உத்தரவிட்டான்...
.
ஆணாக இருந்தால் உச்சந்தலையில் இருந்து
பெண்ணாக இருந்தால் பிறப்பு உறுப்பில் இருந்து ..
என்னவென்று கேட்கிறீர்களா ??
ரம்பத்தை வைத்து அறுப்பது ....
உலகின் கொடூரமான மன்னர்களில் இந்த இவானும் ஒருவன் .
.ரஷ்யாவை உருவாக்கியவர்களின் இந்த இவான்
முக்கியமானவன் ...
எவ்வளவு மோசமானவனாக இருத்தாலும்
ஒரு சின்ன நல்லது இருக்காதா ???
...இவானின் இன்னொரு முகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் ..
இவர் செய்த நல்லது என்னவென்றால்
ரஷ்யாவில் முதல் அச்சு ஆலையை உருவாக்கியது இவர் தான் இன்றும் maskow பிரிண்டிங் யார்ட் என்ற பெயரில் உள்ளது ,,,,
இவர் இவ்வளவு கொடூரமாக மாறகாரணம் சின்ன வயதில் இருந்தே தந்தையை இழந்துள்ளார்
தாயுக்கும் விஷம் வைத்ததாக சொல்லபடுகிறது ...
சிறு வயதில் இருந்தே மனநலம் பாதிப்பட்டவாராக இருந்துள்ளார் என்பதே பலரது வாதம் ....
இவர் திருமணம் முடித்த பெண்களின் எண்ணிக்கை 13


Comments
Post a Comment