இனி மாதம் 12 முன்பதிவு மட்டுமே! அதிர வைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் பயண டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்த இணையதளம் கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த இணையதளம் தொடங்கப்பட்ட முதல் நாள் வெறும் 29 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், இன்று 13 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் இந்த இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ரயிலில் தினமும் சுமார் 2 கோடி பேர் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், இணையதளம் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இனிமேல், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக ஒரு நபர் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
அதுவும், ஐ.ஆர்.டி.சி.யில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர், முன்பதிவு செய்வதற்கு முன்பாக , அவருடைய ஆதார் எண்ணை வழங்கி உறுதி செய்ய வேண்டும்.
மேலும், உடன் பயணிக்கும் ஒரு பயணியின் ஆதார் எண்ணெய்யும் இணைத்து அதை உறுதி செய்ய வேண்டும்.
6 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை.
பயணியின் ஆதார் எண் ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.எண் மூலமாக உறுதி செய்யப்படும். இதற்கு பயணி வாடிக்கையாளரை தெரிந்து கொள்வோம் என்ற ஆப்ஷன் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
ஆதாரைp பதிவு செய்வதற்கான வழிமுறைகள்
ஐ.ஆர்.டி.சி. இணையதளத்திற்கு சென்று ஐ.டி மற்றும் பாஸ்வேர்டு லாக்இன் செய்ய வேண்டும். பின்னர், மை புராபைல் மெனுவிற்கு சென்று ஆதார் கே.யூ.சி. என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் எண்ணை டைப் செய்து ஒ.டி.பி.யை கிளிக் செய்ய வேண்டும்.. இதன் பின்னர், ஆதார் விவரங்களை உறுதி செய்ய சப்மிட் கொடுக்க வேண்டும்.

Comments