10.ஒரு தீவு, ஒரே ஒரு பெண்மணி – 40 ஆண்டுகளாகத் தொடரும் தனிமை வாழ்க்கை

நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும்!

கனடா அருகே அமைந்துள்ள சப்லே தீவில் கடந்த 40 ஆண்டுகளாக பெண்மணி ஒருவர் தனித்து வாழ்ந்து வருகிறார்.

67 வயதாகும் சோயி லூகாஸ் என்ற இந்த பெண்மணியுடன் சப்லே தீவில் 400 குதிரைகளும் 350 பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

21 வயதில் முதன் முறையாக சப்லே தீவிற்கு ஆராய்ச்சிக்காக சென்றதாகவும், அங்குள்ள குதிரை இனங்களை பார்த்த பின்னர் அதுவரை தமக்கிருந்த திட்டங்களை மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சப்லே தீவில் ஆண்டுக்கு 125 நாட்கள் பனி மூடியபடியே இருக்கும் என கூறும் அவர், அந்த குதியில் 300க்கும் அதிகமான கப்பல் விபத்துகள் நேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தீவில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் குடியிருந்துவரும் சோயி லூகாஸ், வாரத்துக்கு ஒருமுறை தமக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை வரவழைத்துக் கொள்கிறார்.

பல ஆண்டுகளாக தாம் சேகரித்து வைத்துள்ள குதிரைகளின் மண்டை ஓடுகள், விஞ்ஞானிகளுக்கு ஆய்வு மேற்கொள்ள பேருதவியாக இருக்கும் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்..

கனடாவின் ஹலிஃபாக்ஸ் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தத் தீவினை அரசு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் கனடாவுடன் எந்த தொடர்பும் இன்றி தனித்தே இந்த ஒற்றைப் பெண்மணியுடன் அமைதியாகக் காட்சியளிக்கிறது …சப்லே தீவு.

Comments

Popular Posts