9.உண்மை தேசம்

கிடங்கு வெட்டி..
கேபிள் புதைத்தவுடன். .
சாலை போடாமல்....
சாலை போட்டபின் 
கிடங்கு வெட்டிக் 
கேபிள் புதைக்கும்
கேனயன் தேசமிது.!  

ஆலையை மூடிப் 
புகையிலை, சிகரெட்
உற்பத்தி செய்யத்
தடைவிதிக் காமல்,
மக்களி டத்தில்
குட்கா, புகையிலை,
சிகரெட் பிடிப்பதை
நிறுத்தச் சொல்லும் 
கிறுக்கர்கள்  தேசமிது.!

மது விலக்கிற்கு 
ஒரு துறையை வைத்துக்
காவலர் போட்டுச் 
சம்பளம் கொடுத்துச்
சாராயத் தையும் 
அரசே விற்கும்
அறிவிலி தேசமிது.!

வேலை வழங்கத் 
துப்பே இல்லை!
வீணாக இங்கே 
வேலை வாய்ப்பு
அலுவக மெதற்கு? 
வெட்டியாய்... இது ஒரு,
வீணர்கள் தேசமிது.! 

பிளாஸ்டிக் பைகள் 
உற்பத்தி செய்யப்
பெட்டிகள் வாங்கி 
அனுமதி அளித்து...,
யாரும் வாங்கிப்
பயன் படுத்த
வேண்டாம்; என்று 
விளம்பரம் செய்யும்
முட்டாள் தேசமிது.!

உழைத்து சாப்பிடும் 
மக்களை எல்லாம்
காவல் செய்து 
வழிகாட் டாமல்,
லத்தியைக் காட்டி
வழிப்பறி  செய்யும்;
திருடர்கள் தேசமிது.!

ஊழல் தடுப்பு,
லஞ்ச ஒழிப்புக்
காவ‌ல்துறை‌கள்; 
எல்லாம் இருந்தும்
ஊழல் லஞ்சத்தை
ஒழிக்க முடியாத
என்னடா தேசமிது?

Comments

Popular Posts