13.அதிசய மரங்கள்
அசைக்க முடியாத அதிசய மரம்

ஜப்பான் நாட்டில் பலதரப்பட்ட மரங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத சிறப்பு, ரிட்டூசென்டக்காட்டா என்ற பகுதியில் உள்ள பைன் மரம் ஒன்றுக்கு கிடைத்துள்ளது. 88 அடி உயரத்தில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் இந்த மரத்தின் வயது 173 ஆண்டுகள். கடந்த 200 ஆண்டுகளில் ஜப்பான் நாட்டை 1986, 1994, 2011 என்று மூன்று முறை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன. அது தவிர 7 முறை பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கணக்கில் அடங்காத அளவுக்கு சூறாவளி காற்று வீசியிருக் கிறது. ஆனால் அது போன்ற காலங்களில் கூட இந்த மரத்திற்கு எந்த ஒரு சிறிய பாதிப்பும் ஏற்படவில்லை. 1986–ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இந்தப் பகுதியில் இருந்த 90 ஆயிரம் மரங்கள் சாய்ந்தன. எஞ்சி நின்ற ஒரே மரம், இந்த பைன் மரம்தான். அதன் காரணமாகவே இதற்கு சிறப்பு சேர்ந்துள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக தற்போது இந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டு, இவாட்டா என்ற பகுதியில் நடப்பட்டிருக்கிறது.
விலங்குகளாக உருமாறும் அதிசய மரம்
விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சியினங்கள் மரங்களை தன் வாழிடமாக பயன்படுத்திப் பார்த்திருப்போம். அவ்வளவு ஏன் மனிதர்கள் கூட மரங்களில் வீடு கட்ட மரவீடு என்று சில இடங்களில் பொழுது போக்குகிறார்கள். அப்படி இருக்கையில், மரமே தன் வடிவத்தை விலங்குகளின் உருவங்களாக மாற்றி பார்த்திருக்கிறீர்களா முழுவதுமாக படியுங்கள்! பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ? செயற்கை அல்ல இயற்கை இந்த மரம் உண்மையில் இயற்கையாக வே உருவானது.. இதில் தோன்றும் விலங்கு உருவங்கள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்கின்றனர் சிலர். ஆனால் அதற்கு எந்த சான்றுகளும் இல்லை. அப்படி என்ன விசேசம் இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால் இது உலகின் பெரிய மரமான போபப் மரத்தைப் போன்று பெரிய அளவில் பரந்து விரிந்துள்ளது. எங்குள்ளது ஆனால் இது உலகின் பெரிய மரமல்ல.. இது ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள காடு ஒன்றில் இயற்கையாகவே வளர்ந்த மரமாகும். அனகோண்டா உருவம் இந்த மரத்தில் அனகோண்டா உருவம் ஒன்றும் உள்ளது. இந்த உருவம் பார்ப்பதற்கு அப்படியே அனகோண்டா பாம்பு போலவே இருக்கிறது. வளைந்திருக்கும் பாம்பு இந்த அனகோண்டா வளைந்து வாயைப் பிளந்தவாறு உண்மையான பாம்பைப் போலவே தோற்றமளிக்கிறது. முதலை உருவம் இம்மரத்தின் மற்றொரு பக்கத்தில் முதலையின் உருவம் பதித்ததுபோன்றுள்ளது. மேடு பள்ளங்கள் முதலையின் உடலில் இருக்கும் மேடு பள்ளங்கள்கூட அப்படியே அமைந்திருக்கும் வகையில் உள்ளது இந்த மரம். மர்மங்கள் நிறைந்த மரம் இதில் உள்ள பல உருவங்கள் என்னவாக இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். சில மர்ம உருவங்களும் இதில் காட்சியளிக்கின்றன. ஏலியன் மரமா இந்த மரத்தில் இருக்கும் சில உருவங்கள் ஏலியன்களா என்றும் சந்தேகம் உள்ளது. சில மனித உருவத்தை ஒத்திருந்தாலும், அவை மனிதர்கள் போலல்லாது வேறு உருவம் கொண்டுள்ளது. குரங்கு மனிதர்களே செதுக்கு வைத்தார்ப் போல குரங்கு உருவம் ஒன்றும் உள்ளது. கிங்காங் குரங்கு பார்ப்பதற்கு கிங்காங் குரங்கு என்று நம்பப்படும் குரங்குவடிவில் உள்ளது இந்த மரத்திலுள்ள உருவம். சிலந்தி சிலந்தி அதாவது எட்டுக்கால் பூச்சி உருவத்தை ஒத்த வடிவங்களும் இந்த மரத்தில் காணப்படுகின்றன. தேள் தேளைப் போன்றதொரு வடிவமும் காணப்படுகிறது. இதைப் பாருங்கள் அப்படியே உள்ளதே. பல்லுயிர் மரம் இந்த மரத்தில் பாம்பு முதல் விலங்குகள் வரை அனைத்தும் காணப்படுகிறது. சிறப்பு வாய்ந்த மரம் இந்த மரத்தைப் பாருங்கள் .. மரம் முழுவதும் விலங்குகள், பறவைகள், பூச்சி இனங்களின் உருவங்கள் உள்ளன. மர்மம் விலகாத மரம் இந்த மரத்தில் இருக்கும் பூச்சிகள் இரவில் உயிர் பெறுவதாக கூறப்படுகிறது.. இது அடர்ந்த காடு என்பதால் யாரும் இங்கு இரவு நேரங்களில் செல்வதில்லை. அந்த மர்மம் இன்று வரை விலகாமலே உள்ளது. அடர்ந்த காடு இந்த மரம் அடர்ந்த காட்டில் உள்ளது. ஆந்திர மாநிலம் நல்கொண்டா பகுதிக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட காடுகளில் இந்த மரம் வளர்ந்துள்ளது.


Comments
Post a Comment