24.சிந்தனை செய்யாததால் சீரழிந்த நியான்டர்தால் மனிதர்கள்!
ஹோமோ சேயிபன்ஸ் எனப்படும் தற்போதைய மனிதர்களை விட நியான்டர்தால் மனிதர்கள், புத்திசாலிகளாக இல்லாததால்தான் அழிந்து போயினர் என்று புதிய ஆய்வு கூறியுள்ளது. நியான்டர்தால் மனிதர்களுக்கும், ஹோமோ சேபியன் மனிதர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசமும், நியான்டர்தால் மனிதர்கள் அழியவும் முக்கியக் காரணமாக இந்த மூளையும், சிந்தனைத் திறனுமே இருந்துள்ளது. இத்தனைக்கும் இரு மனிதர்களுக்குமே மூளை ஒரே சைஸ்தான். ஆனால் ஹோமோ சேபியன் மனிதர்களைப் போல, நியான்டர்தால் மனிதர்கள் தங்களது மூளையைப் பயன்படுத்தவில்லை. முன்பே வந்த ஹோமோசேபியன் மனிதர்கள் ஐந்து ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று இப்படித் தெரிவிக்கிறது. மேலும் இதுவரை கூறப்பட்டு வந்த காலத்திற்கு முன்பாகவே இப்போதைய மனிதர்கள் பூமிக்கு வந்து விட்டதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. சீக்கிரமே அழிந்த நியான்டர்தால் மனிதர்கள் அதேபோல நியான்டர்தால் மனிதர்களும் தற்போது கூறப்படும் காலத்திற்கு முன்பாகவே அழிந்து போய் விட்டனர் என்பதும் இந்த ஆய்வின் முடிவாகும். உருவம் பெரிசு.. மூளையோ சிறிசு நியான்டர்தால் மனிதர்கள் மிகவும் பெரிய உருவம் படைத்தவர்கள். ஆனால் மூளையானது, ஹோமோ சேபியன் மனிதர்களுக்கு இருந்த அதே அளவில்தான் இருந்தது. ஆனால் நியான்டர்தால் மனிதர்கள் தங்களது மூளையை பயன்படுத்தவில்லை. மாறாக உடல் பலத்தையே பெரிதாக கருதினர். சிந்தனை செய்த ஹோமோ சேபியன் ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர்கள் அதாவது ஹோமோ சேபியன் மனிதர்கள், சிந்தனை செய்ய தங்களது மூளையைப் பயன்படுத்தினர். அதிக அளவில்யோசித்தனர். மற்றவர்களுடன் தொடர்பு மற்ற மனிதர்களுடன் அதிக அளவில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.
தங்களது தேவைகளுக்கு மற்றவர்களை அணுக ஆரம்பித்தனர். ஐஸ் ஏஜ்... மொழிகள் தோன்றின ஐஸ் ஏஜ் காலம் வந்தபோது தங்களுக்குள் பல்வேறு மொழிகளில் பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தனர். தாங்கள் குடியிருந்த இடங்களை விட்டு வெளியேறி வெகு தூரம் செல்லவும் ஆரம்பித்தனர். ஆனால் நியான்டர்தால் மனிதர்கள் அப்படி இல்லை. ஐரோப்பாவில் நியான்டர்தால் ஒரு காலத்தில் ஐரோப்பாவில்தான் நியான்டர்தால் மனிதர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் ஹோமோ சேபியன் இனம் உருவான பின்னர் நியான்டர்தால் மனிதர்கள் ஐரோப்பாவிலிருந்து மறைந்து போய் விட்டனர். 45,000 ஆண்டுகளுக்கு முன்பே இது 60,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக இதுவரை கருதப்பட்டது. ஆனால் தற்போதைய ஆய்வின் படி இது 45,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது 45,000 ஆண்டுகளுக்கு முன்பே ஹோமோ சேபியன் மனிதர்கள் பூமியில் தோன்றி விட்டதாக இந்த ஆய்வு சொல்கிறது. 10,000 ஆண்டுக்கு முன் அழிந்த நியான்டர்தால் இந்த ஆய்வின்போது, 39,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நியான்டர்தால் மனிதர்கள் எங்குமே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். நியான்டர்தால் மனிதர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் அழிந்து போயினர் என்பது இதுவரை இருந்த கருத்தாகும். 5000 ஆண்டுகளில் ஹோமோ சேபியன் மனிதர்கள் 45,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளன். அதற்கு அடுத்த 5000 ஆண்டுகளில் நியான்டர்தால் மனிதர்கள் முற்றாக அழிந்து போய் விட்டனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Comments
Post a Comment