மிக அரிய வகையான பாடும் பறவை ஆப்கானிஸ்தானĬ

ஆப்கானிஸ்தானின் பின்தங்கிய பிரதேசமொன்றில் குறித்த வகை பறவைகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.....


மிக அரிய வகையான பாடும் பறவை ஆப்கானிஸ்தானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது:

மிக அரிய வகையிலான பாடும் பறவை இனமொன்று ஆப்கானிஸ்தான் காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் பறவை இனம் தொடர்பாக அதிகத் தகவல்கள் இதுவரையில் திரட்டப்படவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானின் பின்தங்கிய பிரதேசமொன்றில் குறித்த வகை பறவைகள் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அமெரிக்க வனவிலங்க ஆய்வாளரான ரொபர்ட் ரிம்மிஸ் இந்த பறவை இனத்தை கண்டு பிடித்துள்ளார்.
 
மிகச் சிறிய பறவையான இந்தப் பாடும் பறவைகள் 1867ம் முதல் தடவையாக கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 2006ம் ஆண்டு வரையில் இந்தப் பறவை இனம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த ரீட் வகை பாடும் பறவைகள், அநேக சந்தர்ப்பங்களில் ஏனைய பாடும் பறவைகள் வகைகளில் உள்ளடக்கப்படுகின்றமையினால் தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமம் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
ரட் வைக பாடும் பறவைகள் மறைந்து வாழ்வதனையே கூடுதலாக விரும்புகின்றன எனக் குறிப்பிடப்படுகிறது.

Comments