லியான்னடோ டாவின்சி (leonardo da vinci)

Image result for leonardo da vinci



லியனார்டோ டாவின்சி
சொர்க்கம் அடிக்கடி தன் அரிய பொக்கிஷங்களை மனிதர்கள் மீது பொழிவதுண்டு.
அபரிதமான அழகை சில மனிதர்கள் மீது அள்ளி வழங்கியதுமுண்டு. சொர்க்கத்தின் பேரழகாய்ப் பரிணமித்தவன் தான் "லியானார்டோ டாவின்சி".
இது வெறும் புகழ்ச்சி இல்லை. டாவின்சியின் நெஞ்சுரமும், நிமிர்த்த பார்வையும், பேரழகும் நம்மால் வர்ணிக்க இயலாது. அவன் எதைச் செய்தாலும் அது பேரழகாய் விளங்கியது. அதில் தெய்வீக மணம் கமழ்ந்தது. லியனார்டோ தன் வாழுங்காலத்திலும், இறந்தபின்னும் பேரும் புகழும் அடைவான்.
இது உறுதி                                       
ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தனிக்க முடியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் அறியப்படுகிரார் உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.
இவருடைய வாழ்க்கை ஜோர்ஜியோ வசாரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விபரிக்கப்பட்டுள்ளது. லியொனார்டோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர், தாய் கத்தரீனா ஒரு விவசாயிகள் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் சுதந்திரமான ஒவியர் ஆனார்.
இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்குவர முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "லியனார்டோ டி செர் பியெரோ டா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் லியனார்டோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "லியனார்டோ" என்றோ அல்லது "நான் லியனார்டோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "டா வின்சிகள்" என்றில்லாமல், "லியொனார்டோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் வெற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது
466ல், 14 வயதாக இருக்கும்போது, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea di Cione) என்பவரிடம் லியொனார்டோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் வேலைத்தலம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், லியொனார்டோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே வேலைத்தலத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். லியொனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைபு, வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
வெரோக்கியோவின் வேலைத்தலத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசிரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியொனார்டோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியொனார்டோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் லியொனார்டோவின் கைவண்ணமாகவே தோற்றுகிறது.
1472 ஆம் ஆண்டளவில், லியொனார்டோவின் 20 ஆவது வயதில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், லியொனார்டோவின் தந்தையார் இவருக்குத் தனியான வேலைத்தலம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்தும் அவருடன் இணைந்து வேலை செய்தார். லியொனர்டோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த வேலைத்தலத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது.

1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495ல், சார்ள்ஸ் VIII இன்கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, லியொனார்டோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.
1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, லியொனார்டோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார்.
புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்சியைச் சந்தித்தார்.
ஜியார்ஜியோ வாஸரி எனும் விமர்சகன் தனது பிரசித்தி பெற்ற இத்தாலியக் கட்டிடக் கலைஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் எனும் நூலில் இப்படித்தான் வர்ணித்தான். விமர்சகன் வாஸரி மட்டுமல்ல. அவன் காலத்தில் வாழ்ந்த சிற்பிகள், ஓவியர்கள் அனைவருமே இப்படி ஆச்சரியம் கொள்ளும் விதத்தில் தான் லியனார்டோவை வர்ணிக்கத் தொடங்கினர்.
அரிஸ்ஸோவில் பிறந்த ஓவியரும் விமர்சகருமான வாஸரி இத்தாலிய மறுமலர்ச்சியின் பொற்காலத்தை மூன்றாகப் பிரித்தான். ஜியோட்டோவும் பிஸானோவும் வாழ்ந்த காலத்தை முதல் பொற்காலம் என்றும், புருனெல்லசி, டொனடெல்லோ மசோக்கியோ வாழ்ந்த காலத்தை இரண்டாம் பொற்காலம் என்றும், லியனார்டோ டாவின்சி, ரபேல், மைக்கேலேஞ்சலோ வாழ்ந்த காலத்தை மூன்றாம் பொற்காலம் என்றும் பிரித்தான்.
லியனார்டோ, ரபேல் மைக்கேலேஞ்சலோ ஆகிய இக்கலைஞர்கள் வாழ்ந்த காலம் கலைமுழுமை தன் சிகரத்தை அடைந்த காலம் என்றே குறிப்பிடுகிறான் வாஸரி. ரபேலும், மைக்கலேஞ்சலோவும் தெய்வீக அருள் பெற்ற கலைஞர்கள்தான் என்று குறிப்பிடும் வாஸரி ஏனோ இவர்களை இம்மண்ணில் காலூன்றி நின்ற நல்ல தொழில் கலைஞர்கள் என்றளவில் மட்டுமே ஏற்றுக் கொண்டான். டாவின்சியோ பூவுலகில் புகழ் பெற்ற தெய்வீகக் கலைஞன் என்றே குறிப்பிட்டான் வாஸரி.
லியனார்டோ அவனது காலத்தவர்களால் இவ்வாறு ஆச்சர்யம் கொள்ளும் விதத்தில் பார்க்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ஏனென்றால் உலகத்தை தர்க்கக் கண்கொண்டு பார்க்கப் புறப்பட்ட முதல் இத்தாலியக் கலைஞன் லியனார்டோ டாவின்சி. தன் ஒவ்வொரு செயலிலும், சிந்தனையிலும் அறிவியலின் முத்திரை ஒத்திகையை நடத்திவிடுவான் லியனார்டோ.
லியனார்டோ முக்காலத்தை தன் ஞானக்கண்களால் உய்த்துணர்ந்த ஞானி அல்ல, தீர்க்கதரிசியும் அல்ல. அவன் ஒரு சோதனையாளன். டாவின்சி அறிவின் ஒத்திகையை தன் அனைத்து செயலிலும் செய்து பார்த்தவன். பழமையை ஒதுக்கிக் கொண்டு ஒரு புதிய சோதனைப்பாதையைக் கண்டவன். உலகத்தின் உண்மைகளுக்கு ஒரு புதிய பார்வை அளித்தவன். கலையில் அதீதத்தையும், கற்பனையியலையும் ஒதுக்கிட நினைப்போர்க்கு லியனார்டோவின் வாழ்க்கை சுவையான ஒன்றாகும்.

லியனார்டோ டாவின்சியின் பிறந்த காலம்

வின்சி எனும் கிராமத்தில் வாழ்ந்த ஸெர் அந்தோனியோவின் மகன் ஸெர் பியரோ. ஸெர் பியரோவிற்கு திருமணம் ஆனதும் தன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பணிப்பெண் கேடரினாவுடன் ஏற்பட்டக் கள்ளத் தொடர்பில் பிறந்தவன் லியனோர்டோ டாவின்சி.
லியனார்டோ வின்சி என்னும் கிராமத்தில் 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாள் பிறந்தான். லியனார்டோவை சட்டபூர்வமான மகனாக ஸெர்பியரோவால் ஏற்க மனமில்லை. ஸெர்பியரோ தான் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது பெண் மூலம் பிறந்த மகன்களே சட்டபூர்வ மகன்களாயினர். ஸெர்பியரோ நான்காவது பெண் ஒன்றையும் மணம் செய்து கொண்டான். அவளுக்கு பத்து குழந்தைகள் பிறந்தன.

லியனார்டோவுக்கு ஐந்து வயது இருக்கும். தாய் கேடரினா அங்கியனாவில் உள்ள பண்ணை பணியாளன் ஒருவனோடு குடும்பம் நடத்தினாள். லியனார்டோ தன் தாத்தா வீட்டில் தன் தந்தையுடனும் தந்தையின் மனைவி அல்பீரியாவுடனும் வசித்து வந்தான். மிலானிற்கு வரும்படி லியனார்டோ அழைத்ததால் இரண்டாண்டுகளே கேட்டரினா, லியனார்டோவுடன் வசித்து வந்தாள். 1495ஆம் ஆண்டு கேட்டரினா இறந்தாள். லியனார்டோவுக்கு 16 வயதிருக்கும் போது அவனது தாத்தா ஸெர் அந்தோனியோவும் காலமானார்.
லியனார்டோ பிறந்த காலம் ஐரோப்பிய வரலாற்றின் மிக முக்கிய காலமாகும். அரசியலிலும், மதங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு மறுமலர்ச்சி அடைந்த காலம். ஐரோப்பாவின் பண்பாட்டு வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும்போது நிக்கோலஸ் எனும் தத்துவஞானி கோபர்நிகஸ் போன்றோர்கள் மீது தன் தத்துவத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த காலம். கூடன்பெர்க் அச்சிட்ட விவிலிய நூல் அப்போதுதான் வெளியானது.

லியனார்டோவின் பால்ய காலங்களில் பிளாரன்ஸ் மனிதப் பண்பாட்டின் மையமாகத் திகழ்ந்தது. பிளாரன்சில் இருந்த பொட்டிகா எனும் கலைப் பட்டறைதான் லியனார்டோவிற்கு தத்துவ, செய்முறைவழிகளிலும் வழி காட்டியாய் அமைந்தது. இப்பட்டறையில் தான் லியனார்டோவின் மனதில் கலைக்கும் அறிவியலுக்குமான தர்க்கச் சிந்தனைகள் வளர்ந்து பின் இவனை உலகுக்கு அறிமுகப்படுத்தின. இந்நாட்களில் தான் பிரமண்டே, டூரர் போன்றோர் வாழ்ந்து வந்தனர். டெனடெல்லோ பதுவாவில் சிற்பங்கள் செய்து கொண்டிருந்தான். பிலிப்பிலிப் போன்றோர் சுவரோவியங்கள் செய்து கொண்டிருந்தனர். டூரர் போன்றோர் நீர்வண்ண ஓவியங்கள் செய்து கொண்டிருந்தனர்.
1910இல் சிக்மண்ட் ப்ராய்டு லியனார்டோ டாவின்சியும் அவனது குழந்தைப் பருவ நினைவுகளும் எனும் பிரசித்தி பெற்ற கட்டுரையை எழுதினான். எழுபது பக்கங்களுக்கு மேற்பட்ட அக்கட்டுரை மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த போதே தன் தாய் கேட்டரினாவை இழந்ததும், அதன்பின் இளமையில் இரண்டு வளர்ப்புத் தாய்களால் வளர்க்கப்பட்ட சூழலிலிருந்தும் தனது ஆய்வைத் தொடங்கினார் ப்ராய்டு. தாய் கேட்டரினா மிலானிற்கு வருவதும், தந்தை பிளாரன்சில இறப்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகப் ப்ராய்டிற்குப் படுகிறது. தன் பால்ய கால நினைவுகளைக் குறித்திருந்த லியனார்டோ “1493ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் நாள் கேட்ட ரினா வந்தாள், 1504 ஆம் ஆண்டு ஜூலை 9ந் தேதி புதன்கிழமை 7 மணிக்கு ஸர்பியரோ இறந்தான்என்ற குறிப்பும், ‘நான் தொட்டிலில் இருந்த போது பட்டம் ஒன்று அதன் வாலால் எனது வாயை திறந்து என் உதடுகளில் பலமுறை அடித்தது.’
இக்குறிப்புகளை பிராய்டு, லியனார்டோ தன்னினப்புணர்ச்சிக்கான விருப்பமுடையவனாய் இருந்தான் என்பதற்கான ஆதாரங்களாக ஏற்றுக் கொண்டான். லியனார்டோ தன் அழகிய மாணவன் சுசினோவுடன் தன்னினப்புணர்ச்சி கொண்டிருக்கக்கூடும் என்பது விமர்சகர் வாஸரியின் குறிப்புக்களிலிருந்தும் தெரிகிறது. பால்ய காலத்தில் தாயற்ற சூழ்நிலையில் வளர்க்கப்பட்டதால் அவனுக்கு எதையும் கூர்மதியுடன் அணுகும் அறிவைத் தந்தது என்று ப்ராய்டு கூறுகிறார்.
வெர்ரோசியோவின் கலைப்பட்டறை
பிளாரன்ஸின் கலைப் பட்டறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது வெர்ரோசியோவின் பொட்டிகா பட்டறையாகும். வண்ணத்தையும், ஒளியையும் வேறுபடுத்திக் காட்டும் முப்பரிமாணத் தோற்றம் கொண்ட புதுவிதமான ஓவியம் முகிழ்த்தெழுந்த காலம் இக்கலைப்பட்டறையின் காலம் எனலாம்.
வெர்ரோசியோ வரைந்த இயேசுவின் ஞானக் குளியல் எனும் ஓவியத்தில் இப்புதிய வண்ணமாற்றங்களையெல்லாம் காணலாம். இவ்வோவியத்தில் உள்ள நிலக்காட்சியும், தேவதையின் பக்கவாட்டுத் தோற்றமும் அப்போது வெர்ரோசியோவின் மாணவனாக இருந்த லியனார்டோ செய்ததாகும்.

வெர்ரோசியோவின் மாணவனாக இருந்து கொண்டே பொட்டிகா பட்டறையில் மாகியைத் தொழுதல் எனும் ஓவியத்தை வரைந்தான் லியனார்டோ, தனது மாணவனின் உயிர்த்துடிப்பான இவ்வோவியத்தைக் கண்ட வெர்ரோசியோ தன் தூரிகைகளைத் தூர எறிந்தான். தான் இனி ஓவியம் வரையப் போவதில்லை என முடிவு கட்டினான். இருப்பினும் லியனார்டோ, பொட்டிசெல்லி, பொட்டிசினி, பெருகினோ போன்றோர்கள் அடங்கிய அக்குழுவிற்கு தலைவனாக விளங்கினான் வெர்ரோசியோ. இவனது கலைப்பட்டறைக்கு பலவித ஒப்பந்தங்கள் வந்தவண்ணமிருந்தன.
ஓவியச்சிற்பங்கள் என்று மட்டுமில்லாமல், நகை அலங்காரங்கள், விழாக்கால விருந்துகள், சடங்குகள், அதற்கான அலங்கார வேலைப்பாடுகள் போன்ற பல்வேறு வேலைகளுக்கான ஒப்பந்தங்களை ஏற்றான் வெர்ரொசியோ. மாணவர்கள் இவ்வேலைகளைச் செய்யவும், அதனை இவன் மேற்பார்வையிட்டும் ஒப்பந்தங்களை நிறைவேற்றினான் வெர்ரோசியோ. மாணவன் லியனார்டோவும் பலவிதமான பணிகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. கூட்டாகத் தன் நண்பர்களுடன் பணியாற்றி லியனார்டோவுக்குத் தனித்த ஒரு நடையும் உருவாகியது. அப்போது புனித அறிவிப்பு, மற்றும் முடி கூடிய மடோனா என்ற ஓவியங்களைச் செய்தான்.
மடோனாவும் குழந்தையும் எனும் சுடுமண் சிற்பமொன்றும் செய்தான். போர்ச்சுகல் அரண்மனையின் அந்தப்புரம் ஒன்றை அலங்கரிக்கும் வேலையொன்றும் லியனார்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது. லியனார்டோவின் கலையுணர்வும், பல்வேறு தொழில் நுட்பங்களும் மற்ற நண்பர்களைப் பெரிதும் கவர்ந்தது. தனது ஆசிரியரான வெர்ரோசியோவும் லியனார்டோவின் கலைப்படைப்புகளில் மனம் லயித்திருந்தார்.
பாறைகளில் கன்னி என்ற ஓவியமும், புனித அன்னியுடன் கன்னி என்ற ஓவியமும் லியனார்டோவின் சிறந்த கலைப்படைப்புக்களாகும். அந்நாட்களில் பிலிப்போலிபோ போன்றோர் செய்துவந்த மடோனா ஓவியத்திற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருந்தால் வெர்ரோசியோவின் பொட்டிகா பட்டறைக்கு இவ்வோவியங்கள் புகழைத் தந்தன.

லியனார்டோ பல மடோனா ஓவியங்களைச் செய்தான். அதில் முடிசூடிய மடோனா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இவ்வோவியத்தில் மடோனாவும் குழந்தையும் பின் புலமான இருட்டறையில் பிரகாசமான முகப்பொலிவுடன் வரையப்பட்டுள்ளன. இரு ஜன்னல்களிலும் மலைக்காட்சி ஒன்று வரையப்பட்டுள்லது. ஒளியின் பல்நிலைகளை இவ்வோஇயத்தில் காட்டப்பட்டுள்ளது. பெண்ணின் தலைமுடி அமைந்திருக்கிற விதம் பிலிப்போவையும் பிலிப்போ லிபோவையும் ஞாபகப்படுத்துவதாக அழகுற அமைந்துள்ளது.
வெர்ரோசிகோவின் பொட்டிகா பட்டறையில் பல தொழிற்பணிகள் நடைபெற்றன. அப்பட்டறையில் தூக்குவதற்கும், நிமிர்ப்பதற்கும், உருட்டுவதற்கும் பயன்படக்கூடிய பல எந்திரங்கள் இருந்தன. எந்திரங்கள் உபயோகிப்படுத்தும் முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான் லியனார்டோ, துளையிடும் எந்திரங்கள், புள்ளிகள், தொடரபுபடுத்தும் பொறிகள், உருளைகள் போன்ற பல கருவிகளின் உபயோகங்களை நன்கு அறிந்திருந்தான் லியனார்டோ. பிளாரன்சில தங்கியிருந்த ஐந்து ஆண்டுகளில் போட்டிகா பட்டறையின் தேர்ந்த பொறியாளனாகவும், சிறந்த கலைஞனாகவும் விளங்கினான் லியனார்டொடொ.

லியனார்டோவும் மெடிசிக்களும்
பியரோவின் மகன்களான லோரன்சோவையும், கிலியானோவையும் பிளாரன்சின் அரசுப் பொறுப்பினை ஏற்குமாறு அழைத்தான் சிக்னோரியா. பிளாரன்சின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற லோரன்சோ மாண்புமிகு லோரன்சோ என்று மக்களால் அழைக்கப்பட்டான். லோரன்சோ, பொட்டிசெல்லியின் ஆதரவுடன் நியோபுளுடானிக் கழகத்தை சேர்ந்துவைத்திருந்த சிலைகளையெல்லாம் சேர்த்து தன் மெடிசித் தோட்டத்தை அழகுற அமைத்தான் லோரன்சோ. இப்போதெல்லாம் வெர்ரோசியோவின் கலைப்பட்டறையில் லியனார்டோ ஒரு சுதந்திரக் கலைஞனாக இருந்தான்.
                                         
நகரத்தின் எல்லா பண்பாட்டு மையங்களிலும் லியனார்டோவின் புகழ் பரவியிருந்தது.
லியனார்டோவின் திறமையைக் கண்டு வியந்த சிக்னோரியா லியனார்டோவைக் கொண்டு ஒரு ஓவியம் செய்திட வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டான். இவ்வோவியத்திற்கான முன்பணம் பெற்றபோதிலும் லியனார்டோ அவ்வேலையை முடித்துத் தரவில்லை. இருப்பினும் சிக்னோரியோவிடம் நல்ல தொடர்பு இருந்தது. பின்னாட்களில் மாண்புமிகு லோரன்சோவுடனும் இத்தொடர்பு நீடித்திருந்தது. லோரன்சோவுடன் லியனார்டோவுக்கு இருந்த தொடர்பால் அந்நகரத்தின் பணக்காரர்கள் இவனது ஓவியங்களை வாங்கலாயினர். கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும்பண்பாட்டு ஏற்றுமதிஎனும் திட்டவேலைகளுக்கும் லியனார்டோவை பயன்படுத்திக் கொண்டான் லோரன்சோ. நாளடைவில் லியனார்டோவின் அறிவியல் ஆய்வுமுறை லோரன்சோ போன்ற மெடிசிக்களுக்கு இடைஞ்சலாகவும், அவர்களது நியோபுளுடானிக் கொள்கைகளுக்கு விரோதமாகவும் தென்பட்டது.

லியனார்டோவுக்கு கருத்துப்புரியாத மாயாவாதத்தில் நம்பிக்கை இல்லை. மாறாக பௌதீக உலகின் உண்மைகளின் முழுமதிப்பைத் தேட முனைந்தான் லியனார்டோ. தன் அறிவியல் ஆய்வுமுறை லியனார்டோவின் கலைப்படைப்புகளுக்கு எவ்வித குந்தகமும் விளைவிக்கவில்லை. மாறாக கலைப்படைப்புகள் அறிவியல் சார்ந்த புதிய பொலிவுகளைப் பெற்றன.
லியனார்டோ தன் படைப்புகளில் அதன் நேரடியான பார்வைத் தொடர்பு பற்றி மிகவும் அக்கறை செலுத்தினான். இருப்பினும் மாகியைத் தொழுதல் (முடிக்கப் பெறாதது) எனும் தன் ஓவியத்தில் ஒரு குறிப்புப் பொருளான அர்த்தம் விளங்கும்படியாகச் செய்திருந்தான் லியனார்டோ. மெடிசிய ஓவியவழியில் பொட்டிசெல்லி போன்றோர்கள்தான் இவ்வாறு குறிப்புப் பொருளுடன் கூடிய ஓவிய வழியைக் கையாண்டிருந்தனர். இதனால் லியனார்டோவின் மாகியைத் தொழுதல் எனும் ஓவியம் இவ்வாறான குறிப்புப் பொருளை உணர்த்தும்படியாக இருந்ததில் யாரும் ஆச்சரியம் அடையவில்லை.
மாகியைத் தொழுதல் ஓவியம் பிளாரன்சிற்கு வெளியில் உள்ள பலிபீட ஓவியமாக அமைக்க ஒப்பந்தமாகியிருந்தது. இவ்வோவியத்தில் காணப்படும் முன் தரைப்பகுதிகளை முழுக்கவனத்துடன் செய்தது போல பின்புலக் காட்சிகளில் அவ்வளவாக லியனார்டோ கவனம் செலுத்தவில்லை. வலப்பக்கத்திலிருந்து இடபக்கமாக வரையப்பட்டு பின் முழுதுமாக முடிக்கப்பெறாத இவ்வோயியம் விக்கிரகங்கள் போல் ஓவியம் வரையும் கோதிக் ஓவிய வழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. பின்புலமாகக் காணப்படும் கட்டிடங்கள் இடிந்த நிலையில் உள்ளன.
இவ்வொயியத்தின் சிறப்பு அம்சங்களாகத் தோன்றும் தூரத்தன்மை, பொருண்மைத் தன்மை, வெளி போன்ற வற்றிலிருந்து ரபேல் போன்ற ஓவியர்கள் ஓவிய சூட்சுமங்களைத் தெரிந்து கொண்டனர். இவ்வோவியத்தில் கன்னியையும், குழந்தையையும் சூழ்ந்த பலதரப்பட்ட வயதுடையோர் சூழ்ந்து அமைந்திருப்பது கட்டிடவழி உருவ அமைப்பையும், நாடக மேடைத் தன்மை அமைப்பையும் காட்டுவதாகும். மண்டியிட்ட மனிதர்கள், தர்க்கம் செய்யும் மனிதர்கள், தவறினை உணரும் மனிதர்கள், குழம்பிய மனிதர்கள் ஆகியோர்களின் பாவங்களின் அர்த்தங்கள் பொதிந்துள்ளதாக தோன்றுகின்றது இவ்வோவியம். மாகியைத் தொழு தல் உண்மையில் லியனார்டோவின் ஓவியச் சாதனையாகும். மெல்லிய ஒளியாலும் நிழலாலும் அமைக்கப்படும் மரபார்ந்த ஓவியமுறையை மாற்றி வெளியில் அதிகக் கவனம் செலுத்தப்பட்ட புத்தோவியமாக இது திகழ்ந்தது.
லியனார்டோவின் கைப்பிரதிகள்
கிட்டத்திட்ட 4000 பக்கங்களுக்கு மேற்பட்ட லியனார்டோவின் எழுத்துக்களும் கோட்டோவியங்களும் அடங்கிய கைப்பிரதிகள் தற்போது ஆய்வுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தனித்தனி ஏடுகளாகவும், சிறுபுத்தக வடிவிலும் கைப்பிரதிகளாகவும் உள்ளன. இவற்றில் லியனார்டோ கலைக்கென்று தனியாகவும், அறிவியலுக்கென்று தனியாகவும் பங்கங்களை ஒதுக்கி எழுதியது போல் தோன்றவில்லை. சில நேரங்களில் வார்த்தைகளாலும், சில நேரங்களில் விளக்கப் படங்களாலும் தான் உணர்ந்து அறிந்த பௌதீகச் சோதனைகள், பொறியியல் கருத்துகள், இயற்கையைப் பற்றிய தனது கவனிப்புகள் போன்றவற்றை அவ்வப்போது குறித்து வைத்திருந்தான்.

லியனார்டோ இரண்டு விதமான கைப்பிரதிகளைப் பயன்படுத்தினான். முதலாவது குறிப்புகளுக்கான புத்தகம். இப்புத்தகத்தை அவன் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வான். அதனால் விளக்கப்படங்கள் கோட்டோவியங்கள் எழுத்துக்கள் முதலியவற்றோடு இது காணப்படும். இதில் பலதுறை குறிப்புகளை அவ்வப்போது மனதில் தோன்றும் போது குறித்துக் கொள்வான்.
இரண்டாவது வகையான கைப்பிரதி ஒரு பிரதிப்புத்தகமாக இருந்தது. இவை முறைப்படுத்தப்பட்ட குறிப்புக்களாகவும் கோட்டோவியங்களாகவும் தோன்றின. சில நேரங்களில் இக்குறிப்புக்களும் அதன் தொடர்பான கோட்டோவியங்கள் ஒரு தலைப்பு குறித்தவையாகவும் சில நேரங்களில் இக்குறிப்புகள் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமலும் இருந்தன.
பாரிஸ் கைப்பிரதி எனும் கைப்பிரதியில் நிழல்கள், xஒளி, தூரத்தன்மை, நீரியல் போன்றவற்றிற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன.
பாஸ்டர் பியொஸட கைப்பிரதி சமதளம், கன ஜியோமிதி போன்றவற்றிற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றன.

லெஸ்செஸ்டர் கைப்பிரதியில் நீரியல், வானவூர்தி, மண் வளம், போன்றவற்றிற்கான குறிப்புகள் உள்ளன. போர்க்கருவிகள், கட்டிடக்கலை பற்றிய குறிப்புகள் சிலவற்றில் காணப்படுகின்றன.
மேட்ரில் கைப்பிரதி I இரண்டு பாகங்களான சிறுபுத்தகங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு புத்தகமும் 96 பக்கங்கள் உடையதாயிருந்தன. முதல் புத்தகம் பலவிதமான இயந்திரவியல் பற்றிய குறிப்புக்களும் இரண்டாம் புத்தகம் பொறியியல் தத்துவம் பற்றியதாகவும் இருந்தன.

மேட்ரில் கைப்பிரதி II இது 140 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியாகும். இதில் புடைப்பு வரைபடங்கள், பிளாரன்சில அதன் கடற்கரை வரை உள்ள ஆர்னோ பள்ளத்தாக்கின் வரைகோடுகள் காணப்படுகின்றன
பியாம்பினோ கோட்டையின் அளவுகளும், அதன் குறிப்புகள் இதில் காணப்படுகின்றன.
சில நேரங்கள் தன் சொந்த குறிப்புகளும் காணப்படுகின்றன.

அங்கியாரிப் போர் வரைந்து கொண்டிருக்கும் போது உருவாகிய பெரிய புயலொன்றைப்பற்றிய குறிப்பும் இதில் காணப்படுகின்றன. ஒரு நாள் இரவில் சான் ஆண்டிரியாவின் வட்டத்தைசதுரவடிவம் கொண்டு எவ்வாறு அளப்பது என்பதுபற்றியும் கண்டுபிடிக்கும் வழிநிலைப்பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. பியாம்பினோ விலிருந்து அவசரமாக பிளாரன்சிற்கு சென்றபோது பிளாரன்சில்தான் தவறுதலாக வைத்துவிட்டு வந்த புத்தகங்களுக்கான குறிப்புக்கள் இருந்தன.
சில நேரங்களில் கருப்பு மையினாலும் சில நேரங்களில் சிவப்பு சாக்கட்டியினாலும் அக்குறிப்புகள் காணப்பட்டன. அதில் ஒன்று குதிரை வீரன். பிரான்செங்க மெல்ச் என்பவன் லியனார்டோ இறந்தபிறகு அவனது கைப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டான். அவன் முழுமையாக எல்லாப் பிரதிகளையும் பெற்றுக் கொண்டான் என்று சொல்ல முடியவில்லை. டூரர் லியனார்டோவின் சில தனித்தாட்களையும், சிறு புத்தங்களையும் பெற்றுக்கொண்டான். செல்லின் என்பவன் லியனார்டோவின் தூரத்தை காண்பது பற்றிய குறிப்பு தன்னிடம் இருப்பதாகக் கூறினான்.

உருவப்படங்கள்
மிலான் நகரில் லியனார்டோவுக்கு கலைப்பட்டறை ஒன்று இருந்தது. இப்பட்டறையில் லியனார்டோவின் ஓவியங்களைப் பார்ப்பதற்கென்று ஓவியர்கள் சிற்பிகளெல்லாம் வந்தவண்ணமிருந்தனர். ஜியோவன்னி பொல்ரோபியோ, பெர்னாடி டோடி கொண்டி, மற்றும் ஜியான் ஜியாகோமா கேப்ரொட்டி போன்ற கலைஞர்கள் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் வந்து பார்வையிட்டபோது மலைப்பாறைகளில் கன்னி எனும் ஓவியத்தின் இரண்டாம் பிரதியையும், ஒரு பெண்ணின் தலை எனும் ஓவியத்தையும் வரைந்து கொண்டிருந்தான் லியனார்டோ. அப்போது லியனார்டோ வரைந்து கொண்டிருந்த உருவப்படங்கள் நகரில் பிரபலமான கலைஞர்கள் எல்லாம் ஆச்சரியம் கொள்ளும் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பெண்ணின் தலை எனும் உருவப்படத்தையும் அவர்கள் உற்று நோக்கினர். பெண்ணின் முகம் வட்டவடிவமுமில்லாமல், தலைகீழான முக்கோணமுமில்லாமல் இடைப்பட்டத்தில் அழகியதொன்றாய் அமைந்திருந்தன. பெண்ணின் மூக்கு நீண்டிருந்தது மிகப் பொருத்தமாய் அமைந்திருந்தது. சதைப்பற்றுள்ள அவளது உதடுகள் அவளது சிரிப்பை சிறிது மங்கச் செய்திருந்தன. அவளது தாடை எடுப்பாகவும், வட்டவடிவமாகவும் அமைக்கப்பட்டிருந்தது. இப்பெண்ணின் முன் மாதிரியை மலைப்பாதையில் கன்னி எனும் தன் ஓவியத்தில் முன்னமே வரைந்திருந்தான் லியனார்டோ.
லியனார்டோ வரைந்த லிட்டா மடோனா எனும் உருவப்படத்தை பின்னாட்களில் இரண்டாம் ஜார் மன்னன் அலெக்சாண்டர் வாங்கி தன் பொக்கிஷமாகக் காத்தான். அவ்வோவியத்தில் உருவத்தை சற்று அரூபமாக வரைந்திருந்தான்.

கன்னியும் குழந்தையும் இரண்டு திறந்துவிடப்பட்ட ஜன்னல்களுக்கிடையில் இருப்பது போன்று இவ்வுருவப்படம் அமைந்திருந்தது. லிட்டர் மடோனா வரைந்திருந்த விதம் அப்போது பிரபலமாய் இருந்த தன் பினாய்ஸ் மடோனோ எனும் உருவப்படத்தை ஒத்திருந்தது ஒருவிதத்தில். பினாய்ஸ் மடோனாவின் மறுபிரதியென்றே சொல்லிவிடலாம்.
ஏர்மின்னுடன் ஒரு யுவதி எனும் உருவப்படம் வியனார்டொ வரைந்ததாகக் கூறுகிறார்கள். இதில் லுடோவிக்கோவின் மனைவு செசிலியா கேலரானியை வரைந்திருந்தான். அழகிய யுவதியான செசிலியா லியனார்டோவின் நண்பனாகவும் இருந்தாள். எர்மின் என்பது டூக்கின் குறியீட்டு அடையாளச் சின்னமாகவும் அதே நேரத்தில் கேலரானி என்ற செசிலியாவின் பெயராகவும் அமைந்திருந்தது அதன் சிறப்புக்களில் ஒன்றாகும்.
இவ்வகையான உருவப்படங்கள் வரைந்த போதெல்லாம் படத்தின் வண்ணச்சமநிலை குறித்து அதிகக் கவனம் கொண்டான் லியனார்டோ. ஓவியத்தில் வெளிச்சப் பகுதிகள் தோன்றுவதால் மற்ற இடங்களுக்கு அதற்கான வண்ணச் சமநிலையை ஏற்படுத்துவது சற்றுக் கடினமாகத் தோன்றியது. லியனார்டொ பழுப்பானதும் அதே நேரத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத அழுக்கு நிற வண்ணங்களை பின்தள வண்ணங்களாக அமைந்து ஓவியத்தை சமநிலைக்கு கொண்டுவந்தான்.
அழகிய பெண் ஒருவள் அன்னத்தைப்பிடித்த வண்ணம் வரையப்பட்ட உருவப்படங்கள் 16ஆம் நூற்றாண்டின் கலைச் சிகரத்திற்கு எடுத்துக்காட்டாயிருந்தன.

1490களில் லோடோவிகோ மற்றும் அவளது மனைவி பீட்ரிஸ் ஆகிய இருவரது உருவப்படங்களை வரைந்து முடித்தான் லியனார்டோ. இசைக் கலைஞன் எனும் உருவப்படம் அப்போது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. தன் நண்பனான பிரான்சினோ கபுரியோவை இசைக் கலைஞனாய் வரைந்திருந்தான். இதில் இசைக் கலைஞன் முகம் மிகவும் பிரகாசமாய் இருந்தது. பின்புலமான அமைப்பில் ஒளி நிழல்கள் சற்று வித்தியாசமாகவும் காணப்பட்டது.
பன்முகத் தன்மை
வெனிஸ் நகரில் வெர்ரோசியோவினால் செய்யப்பட்ட வெண்கலச் சிலை போன்று லோடோவிகோ தனது தந்தை பிரான்செஸ்கோ வின் ஞாபகார்த்தமாக நினைவுச்சின்னமொன்றை எழுப்ப விரும்பினான். லியனார்டோவால் அப்போது வெர்ரோசியோவின் கலைப்பட்டறை பிரபலமாகியிருந்தது.
கலைப்பட்டறையின் மையக் கலைஞனான லியனார்டோவின் பலவிதத் திறமைகளைக் கண்டு வியந்த லோடோவிகோ நினைவுச் சின்னத்தை லியனார்டோவால் எழுப்பப்பட வெண்டுமென்று தீர்மானித்தான். அப்போது லோரான்சோ சிஸ்டைன் தேவாலய விதான ஓவியங்கள் செய்வதற்கு பொட்டிசெல்வி, கிர்லெண்டியோ, பெருகினோ, கோசிமோ, ரோசெல்லி போன்ற ஓவியர்களை ரோமிற்கு பிளாரன்சிலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தான்.
பிளாரன்சைப் போல் மிலானிலும் அறிஞர்களும், கலைஞர்களும் பல்கியிருந்தனர். இக்காலங்களில் லியனார்டோ தன் பன்குகத் திறமைகளைக் காட்டி உலகுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. லியனார்டோவின் பல்வேறு திறமைகளைக் கண்டு, MMமச்சியவெல்லி, முதலாம் பிரான்சிஸ் பொன்றொரெல்லாம் நெருங்கிய நண்பர்களாயினர். ஓவியம், சிற்பம், பொறியியல், நீரியல் போன்ற பல்வேறுதுறைகளில் புகழ்பெற்றிருந்த லியனார்டோ அரசாங்கப்பணிகளை நிறைவேற்றிவதிலும் ஆர்வமுடன் திகழ்ந்தார்.
விழாக்களுக்கான அலங்கார வேலைப்பாடுகளைச் செய்தல், இசை நிகழ்ச்சிகளை நடத்துதல், வார்த்தை சிலம்பம் ஆடுதல், கவிதையை அழகுற உரக்க வாசித்தல் போன்றவற்றிலும் திறம்பட நடந்தான்.
லியனார்டோ தான் எழுதும் கடிதங்களில் தன்னைப் பற்றியும் புகழ்ந்து எழுதிக் கொள்வதும் உண்டு. தன்னை ஒரு நிபுணன் என்றும், புதுவிதமான போர்க்கருவிகளை கண்டுபிடித்தவன் என்றும் கடிதங்களில் எழுதிக்கொள்வான். தான் ஒரு கட்டிக் கலைஞன் என்றும், சிறந்த சிற்பி என்றும் மாபெரும் ஓவியன் என்றும், நீரியல், பொறியியல் வல்லுநன் என்றெல்லாம் அக்கடிதங்களில் தன்னைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவன். சலவைக் கல்லாலும், வெண்கலத்தாலும் சிலைவடிக்கும் சிற்பி என்று தன்னையே புகழ்ந்து கொண்டான் லியனார்டோ.
லியனார்டோ தன் கடிதங்களில் எழுதிய புகழுறைகள் வெறும் வெற்றுப் புகழ்ச்சிகள் அல்ல.

லியனார்டோ உண்மையில் பல்வேறு திறன்களைப் பெற்ற அறிவியல் வல்லுநராய்த் திகழ்ந்தான். பலூன் செய்வதிலிருந்து தொடங்கி, கண்ணாடி செய்தல், தண்ணீரின் ஓட்டத்தை அறிதல், குதிரைகளின் உடற்கூறுகளை ஆய்தல், நீரியல், பொறியியல் எந்திரங்கள் செய்தல், போர் ஆயுதங்கள் செய்தல் போன்ற பல்வேறு துறைகளில் தேர்ந்த அறிவு பெற்றிருந்தான். லியனார்டோவின் கைப்பிரதிகளில் உள்ள குறிப்புக்களும், கோட்டோவியங்களும் அவனது பன்முகத் திறன்களை பறைசாற்றும்.
லியனார்டோ அவ்வப்போது தன் மனதில் தோன்றியவைகளையெல்லாம் குறிப்பெடுத்துக் கொள்வான். இவற்றை சிறு குறிப்புக்களாக கிறுக்கி வைப்பது வழக்கம். சில நேரங்களில் தன் குறிப்பேட்டில் தன்னை ஒரு புத்தக அறிவில்லாதவன் என்று திட்டி எழுதியிருந்தான். தனக்கு தாய்மொழி மட்டும் தெரிந்திருந்தது அவனுக்கு குறையாகப் பட்டது. லத்தீன் மொழியை முழுவதுமாக கற்க இயலவில்லையே என்று தன்னை நொந்து கொண்டான். அதனால் பல இலக்கண நூல்களையும், அகராதிகளையும் வைத்துக் கொண்டு பல புதிய வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டான். லியனார்டோ, லியனார்டோ தனது 40 வயது நிரம்பிய போது லத்தீன் மொழியிலும், கணிதம், ஜீயோமிதித் தேற்றங்கள் முதலியவற்றிலும் ஆழ்ந்த அறிவுள்ளவனாக விளங்கினான்.
எதையும் அறிவியல் கண்கொண்டு அலசும் லியனார்டோவுக்கு வெளி என்பது வெறும் வெற்றிடமாகத் தோன்றவில்லை. கவிதையை உரக்க வாசித்து ஆனந்தம் அடைந்த லியனார்டோவால் இயற்கையின் மாயா தத்துவங்களில் நம்பிக்கை கொள்ள முடியவில்லை. அவற்றை அலசி ஆராய்ந்து அறிவியல் உண்மைகள் காண முயன்றான்.
ஸ்போர்ஸா நினைவுச் சின்னம்
அந்திம உணவு எனும் ஓவியத்தினையும், சில உருவப் படங்களையும் வரைந்து முடித்த லியனார்டோ சுமார் பத்தாண்டுகள் பிரான்சிஸ்கோ ஸ்போர்ஸாவின் நினைவுச் சின்னமாக எழுப்பப்படும் வெண்கலக் குதிரைச்சிலை பற்றிய திட்டங்களில் தீவிரமாக ஈடுபடலானான். இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்குக் காரணமாக லுடோவிகோ வின் சகோதரன் கலிஸோ மரிய ஸ்போர்ஸா மிகவும் தூண்டுதலாக இருந்தான். தனது ஆசிரியர் வெர்ரோசியோ மிலான் நகரில் செய்ததுபோல் மிகப் பிருமாண்டமான அளவில் இவ்வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்று திட்டமிட்டான் லியனார்டோ. மிலான் அரண்மனை வெட்டவெளி ஒன்றில் எல்லோரும் பார்க்கும்படியாக குதிரைசிலையை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. லியனார்டோ இச்சிலைக்கான வெண்களிமண்ணாலான மாதிரி ஒன்றையும் செய்திருந்தான்.
இம்மாதிரியின் விட்டத்தின் அளவு பனிரெண்டு ப்ரேசியா அளவாகும். அதன் தற்போதைய அளவு 25 அடியாகும். இந்த மாதிரி உருவை செய்தபோதுதான் சிலையின் அபரிமிதமான அளவாலும் அதனைத் தொடர்ந்து விக்ரக் வார்ப்பில் எழும் சில பிரச்சனைகள் குறித்தும் சில சந்தேகங்கள் எழத் தொடங்கின. லியனார்டொ எல்லாவற்றையும் முன்னெச்சரிக்கையுடன் செய்யத் திட்டமிட்டான். வார்ப்பின் பல்வேறு நிலைகளுக்கான குறிப்புக்களையும், கோட்டோவியங்களையும் தன் குறிப்புப் புத்தகத்தில் அவ்வப்போது எழுதிக்கொண்டான். முதலில் குதிரையை வாலில்லாமல் உருக்கி வார்த்து வார்ப்புக் குழிக்கருகில் சாய்த்துவிடுவதென்று திட்டமிட்டான் லியனார்டோ. வார்ப்புக் குழியில் தலைகீழாகக் குதிரையை சாய்ப்பதெப்படி என்பதற்கான குறிப்புகளையும் அப்புத்தகத்தில் குறித்துக் கொண்டான்.
குதிரைச் சிலைக்கான மண் மாதிரி செய்து ஒரே வார்ப்பில் சிலையை முடிப்பதற்கான திட்டக் குறிப்புக்களும் அவனிடம் காணப்பட்டன.

ஒரே வார்ப்பில் சிலையை முடிப்பதென்றால் மண் மாதிரியை பல பாகங்களாகச் செய்து அவற்றை ஒன்று சேர்த்தால்தான் வார்ப்பு சிக்கலில்லாமல் முடியுமென்று மண் மாதிரியின் உட்கூட்டில் மெழுகு அல்லது களிமண்ணைப் பரப்பி அதற்கான தடிமண் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மாதிரியின் வெளிப்புறம் இரும்புப்பட்டைகளால் ஒட்டப்பட்டிருந்தது. இம்மாத்ரியின் உட்கூட்டிலுள்ள சுடுமண்ணாலான குதிரை உரு அமைக்கப்பட்டிருந்தது. உருக்கப்பட்ட வெண்கலக் குழம்பை குகையில் பாய்த்து அதனால் ஒரே வார்ப்பில் குதிரையின் உருவை கொணர்ந்துவிடலாம் என்றும் அக்குறிப்புக்களுள் எழுதியிருந்தான் லியனார்டோ. மண் மாதிரியை வார்ப்புக் குழிக்கருவில் நிமிர்த்து வைப்பதா, படுத்த நிலையில் வைப்பதா, தலைகீழாக வைப்பதா என்பது பற்றியும் அதில் எது சரியாக இருக்கமுடியும் என்பது பற்றியும் யோசித்து வைத்திருந்தான் லியனார்டோ. இவ்வார்ப்பிற்கான பல்வேறு வெப்பநிலைகுறித்தும் அவனது குறிப்புக்களில் காணப்பட்டன.
இது மட்டுமில்லாமல் குதிரையின் உடற் கூறுகளைப் பற்றி அறிந்து கொள்ள குதிரை லாயமொன்றிலேயே குடியிருந்தான் லியனார்டோ. லோடோவிகோவின் தளபதி ஒருவனுக்குச் சொந்தமான குதிரை லாயமது. குதிரையின் உடற்கூறுகளை அவ்வப்போது கோட்டோவியங்கள் பலவித குதிரை நிலைகளை காட்டிக்கொண்டிருந்தது. அசைபோடும் குதிரை, நிற்கும் குதிரை, முன்னங்கால்களை தூக்கிப் பாயும் குதிரை, ஓடும் குதிரை பொன்ற பல்வேறு கோட்டோவியங்கள் செய்திருந்தான். குதிரையின் ஒவ்வொரு உறுப்புகளையும் தனித்தனிக் கோட்டோவியங்களாகச் செய்திருந்தான். பல்வேறு ஜாதிக் குதிரைகளைப் பற்றிய குறிப்புக்கள் அடங்கிய புத்தகங்கள் பல அவனிடம் கைவசம் இருந்தன.
லியனார்டோ குதிரைச் சிலைக்கான வார்ப்புத் திட்டங்களில் இவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தும், மிலானில் இருந்த லோரென்சா மெடிசியின் பிரதிநிதி பியட்ரோ அளிமனிக்கு இவ்வேலைத்திட்டம் சம்மந்தமாக சந்தேகம் எழுந்தது. அதனால் இத்திட்டத்தை மாற்றிவிடும்படி தன் பிரபுவிற்கு கடிதம் எழுதினான் பியட்ரோ. லோடோ விகோவுக்கும் பிரும்மாண்டமான இத்திட்டத்தை லியனார்டோவால் நிறைவேற்ற இயலுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் லோடேவிகோ தான் லோரன்சோவிற்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்திற்கான மாற்று சிற்பிகளை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டான். அப்போது லுடோவிகோவிடமிருந்து லியனார்டோவுக்கு 158000 பவுண்டு உலோகம் வந்தது.
குதிரைசெய்வதற்காக அனுப்பப்பட்ட உலோகமல்ல அது. வெண்கலக் குதிரைச் சிலைத் திட்டத்தை கைவிட்டதற்கான காரணம் லியனார்டோ அல்ல. அவ்வளவு பெரிய பிரும் மாண்டமான திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதிநிலை லுடோவிகோவிற்குக் குறைவாகவிருந்தது. உலோகங்களை உருக்கி வார்க்கும் கலையில் உண்மையில் லியனார்டோ ஒரு புதிய கண்டுபிடிப்பாளனாக இருந்ததை அவனது கைப்பிரதிகள் காட்டுகின்றன. இப்புதிய கண்டுபிடிப்பிற்கு அவனது கலை அறிவும், அறிவியல் அறிவும், பொறியியல் அறிவும் மிகவும் பயன்பட்டன. சிவப்பு சாக்கட்டியினால் அவ்வப்போது வரைந்த கோட்டோவியங்களூம் குறிப்புகளும் அவன் ஒரு வார்ப்பியல் நிபுணன் என்பதை காட்டிக் கொண்டிருந்தன.
மோனே லிசா
19ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை மிகப் பிரபல்யம் அடைந்துவரும் மேனோ லிசா என்றழைக்கப்படும் ஜியாகோண்டா எனும் ஓவியத்திற்கு வந்தடைந்த புகழுரைகள் போல் உலகில் எந்த ஓவியமும் பெற்றதில்லை. இத்தாலியில் இதன் மூல ஓவியம்களவு போனதாக அறிவிக்கப்பட்டபோது மக்கள் பீதிகொண்டலைந்தனர். எதையும் மறுதலிக்கும் வக்கிர மனம் படைத்தவர்களும் இவ்வோவியத்தைப் புகழ்ந்தனர். மரபு வழியை எதிர்ப்பவர்களும் இவ்வொவியத்தைப் புகழத் தொடங்கினர். மோனோலி சாவின் புன்னகையின் சூட்சுமம் குறித்த நூல்கள் நூற்றுக் கணக்கில் வரத் தொடங்கின.
பொதலெர் எனும் குறியீட்டுக் கவிஞன் மோனோலி சாவின் உருவத்திற்கும், அவள் பின்புலமாக உள்ள நிலக்காட்சிக்கும் உள்ள தொடர்பு அறிந்தவன் போல் எழுதினான். வால்டர் பேட்டர் மோனோலிசாவை மயானங்களை வென்று சாகாவரம் பெற்ற நங்கை என்றான். அவள் அருகிலுள்ள பாறையினை விடவும் அவள் நீண்டநாட்கள் வாழ்வாள் என்றான். ஆழ்கடலில் தினமும் நீந்தும் இவள் குழலின் கீதம் இவள் என்றான். இவளது கண்ணிமைகளும், கரங்களும் எவ்வளவு மென்மையானவை என்றான்.

ஓவியன் ரபேல் மோனோலிசா ஓவியத்தால் ஈர்க்கப்பட்டான். பின்னால் வந்த சர்ரியலிஸ்டுகள் இவ்வோவியத்தின் பாதிப்புக்குள்ளாகினார்கள். இவ்வோவியத்தில் காணப்படும் மரபெதிர்ப்பு சர்ரியலிஸ்டுகளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சல்வதோர் தலி இதுபோன்ற ஒரு ஓவியம் செய்து அதில் தன் கண்களைப் பொருத்தி தன் வக்ரத்தை வெளிப்படுதிக் கொண்டான்.
அங்கியாரிப் போர் எனும் ஓவியம் வரைந்து கொண்டிருந்த போது லியனார்டோ டாவின்சி ஜியாகோண்டா எனப்படும் உலகப் புகழ்பெற்ற மோனோலிசா ஓவியத்தை வரைந்தான். இவ்வோவியத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மோனோலிசா பிரான்செஸ்கா டெல் ஜியாகொண்டாவின் மனைவியாளவாள் என்று விமர்சகர் வாஸரி கூறுகிறார். பௌல் ஆண்டர்சன் என்பவன் மோனோலிசா ஓவியத்தினால் உணர்வு பெற்று ஒளி எனும் அறிவியல் நாவல் எழுதினான்.
இவ்வோவியத்தில் மோனோலிசாவின் புன்னகை பற்றிய புதிர்கள் பல் வந்தவண்ணமிருப்பினும், ஓவிய உலகில் பல புதிய மாற்றங்களை தன்னுள் ஏற்படுத்திக் கொண்ட ஓவியமாகவே மோனோலிசா தோன்றியது. மோனோலிசாவின் மனோநிலையும், சுற்றுச் சூழலை வெளிப்படுத்தும் பல சூட்சமமான அர்த்தத் தொனியுடன் விளங்கியது இவ்வோவியம். உருவத்தில் எளிமைக்கு இவ்வோவியத்தை முன்னுதாரணமாக சொல்ல வேண்டும். ஏகாந்த வெளியின் காலமற்ற தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவது போல் தோன்றியது இவ்வோவியம். ரபேல் மட்டுமின்றி பிற்காலத்து உருவப்பட ஓவியர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இவ்வோவியம் திகழ்ந்தது.

இவ்வோவியத்தில் தோன்றும் மத்திய தரைக் கடல் நிலப் பகுதி ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களிலிருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டது. கருங்கடலில் கலக்கும் டான்யூப் நதி அதன் சமவெளிப் பிரதேசங்கள் இவற்றின் அறிகுறிகளை மலைச்சரிவுப் பகுதிகளில் காணலாம். இதில் பூமியின் பாரத்தை கடல் எவ்வாறு மாற்றுகிறது எனும் மாபெரும் இக்காட்சிகளை தனது புத்தகப் பிரதிகளில் குறிப்பிடும் போது ஒரு தத்துவஞானி போல் கூறுகிறான் லியனார்டோ.
டிரிவல்சியோ நினைவுச் சின்னம்
ரோமில் பத்தாம் லியோவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக லியனார்டோ கடுமையான காலங்களைச் சந்திக்க வேண்டியதாயிற்று. அதற்குப்பின் முதலாம் பிரான்சிஸ்ஸோடு வாழ்ந்த காலங்கள் லியனார்டோவுக்கு மனநிறைவைத் தந்தது. இக்காலங்களிலெல்லாம் ஓவியம் வரைவதை ஏனோ முழுதுமாக கைவிட்டிருந்தான் லியனார்டோ. ஆராய்ச்சியிலுமாக அவனது முழுக்கவனம் திரும்பியிருந்தது. ஒருவழியாக மிலான் நகரில் வாழ்வதென்று முடிவுடன் திரும்பிய லியனார்டோவுக்கு பத்தாம் லூயிஸும், அம்பாயிஸின் மன்னன் சார்லஸும் புகலிடம் அளித்தனர்.

லோடோவிகோவினால் தனக்குக் கிடைக்கப் பெற்ற பழத்தோட்டத்தை இவர்கள் மீண்டும் லியனார்டோவுக்கு வாங்கித் தந்தனர். போர்ட்டா ஒரியன்டோவுக்கு வாங்கித் தந்தனர். போர்ட்டா ஓரியன்டேலுள்ள தனது சொந்த வீட்டில் குடியேறினான் லியனார்டோ. அங்கு புதிய கலைச்சூழல் ஏற்பட்டிருந்தது. புதிய நண்பர்களும், மாணவர்களும் லியனார்டோவைத் தேடிவந்தனர். ரம்மியமான இக்கலைச்சூழல் லியனார்டோவுக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களும் வரத் தொடங்கின. நீரியல் எந்திரங்கள் செய்வதற்கான ஒப்பந்தங்கள், கட்டிடங்கள் செய்வதற்கான ஒப்பந்தங்கள், கல்லறையை அழகுபடுத்துவதற்கான ஒப்பந்தங்கள், நினைவுச் சின்னங்களுக்கான ஒப்பந்தங்கள் என்று பலதிறப்பட்ட திட்டவேலைகளுக்கான ஒப்பந்தங்கள் வரத் தொடங்கின.
மிலானிற்கு வந்தவுடன் மார்ஷல் ஜியான் ஜியகோமா டிரிவல்சியோவின் ஞாபகார்த்தமாக எழுப்பப்பட வேண்டிய குதிரைச்சிலை நினைவுச் சின்னத்திற்கான ஒப்பந்தத்தை முதலில் ஏற்றுக்கொண்டான். மன்னன் டிரிவல்சியோ இரண்டாம் மொரோவை 1499இல் வென்றான். அவனது ஞாபகார்த்தமாக சான் செல்சோவில் அவனது கல்லறையை ஞாபகார்த்தச் சின்னமாக எழுப்பவேண்டும் என்று அவனது குடும்பத்தினர் விரும்பினர். அதில் குதிரைச் சிலை ஒன்றும் எழுப்ப திட்டமிட்ட அவனது குடும்பத்தினர் லியனார்டோவுடன் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டனர். இக்கல்லறைக்கான கட்டிடமும், குதிரைச் சிலையும் செய்வதென்றால் அதற்கான பொருட்செலவாக 1582 டூக்கெட்டுகள் ஆகும் என்றும் இது தவிர சலவைக் கல்லிற்கான 389 டூக்கெட்டுகளும், கூலிச் செலவாக 1075 டூக்கெட்டுகளும் ஆகுமென்று லியனார்டோ அவர்களிடம் கூறினான்.
கைவிடப்பட்ட ஸ்போர்சா நினைவுச் சின்னத்தை மனதிற் கொண்டு இந்நினைவுச் சின்னத்தை மனதிற் கொண்டு இந்நினைவுச் சின்னத்தையும், கல்லறையையும் திறம்பட முடிக்க முடிவுகட்டினான் லியனார்டோ. அமைப்பு முறையிலும், இதன் கருத்தாக்க முறையிலும் புதுமையாக இவ்வேலையை முடிக்க எண்ணினான் லியனார்டோ, டிரிவல்சியோ கல்லறை நினைவுச் சின்னம் சிற்பங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாய் விளங்கியது. கேம்பியனாவினால் செய்யப்பட்ட கல்லறைக் கட்டிடமும், பதுவாயில் டோனடெல்லா என்ற சிற்பியினால் எழுப்பப்பட்ட குறியீட்டு முறையிலான கல்லறைக் கட்டிடமும் அப்போது புகழ்பெற்றிருந்த போதிலும், லியனார்டோவினால் எழுப்பப்பட்ட டிரிவல்சியோ கல்லறை நினைவுச் சின்னம் புதுமையாக அமைக்கப் பெற்றிருப்பதைக் கண்டு சிற்பிகள் வியந்தனர். பின்னாட்களில் இந்நினைவுக் கட்டிடம் மைக்கேலேஞ்சலோவுக்கு உந்துதலாக அமைந்தது.
லெடா
லியனார்டோ கிறிஸ்துவத்திற்கு எதிரான தத்துவங்களைப் பரப்புவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தான். அதனால் மனிதனைப் பற்றியும், மனிதனோடு இயற்கைக்கு உள்ள பிடிப்பு பற்றியும் தன் ஓவியத்தில் சூட்சுமமாக தன் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்பினான். மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு பற்றிய மாயாவாதத்தில் அவன் நம்பிக்கைக் கொள்ளவில்லை. மாறாக ஆக்கும் சக்தியிலும், அழிக்கும் சக்தியிலும் மனிதன் இயற்கையின் பிரதிநிதி என்ற கருத்தினைக் கொண்டிருந்தான். இக்காலங்களில் வரைந்தது தான் லெடா எனும் நிர்வாண நங்கையின் ஓவியமாகும்.
இவ்வோவியத்தில் லெடா எனும் மங்கை அன்னப்பறவை ஒன்றை அணைத்துக் கொண்டுள்ளான். லெடாவின் காலடியில் இரண்டு முட்டைகள் உடைந்து கிடக்கின்றன. உடைந்த இரண்டு முட்டையிலிருந்து ஹெலன், கிளைடெம்னஸ்ட்ரா, கேஸ்டர் போலக்ஸ் அகிய நான்கு குழந்தைகள் வெளிப்படுகின்றன. லெடாவையும், அன்னத்தையும் அழகிய தாவரங்கள் சூழ்ந்துள்ளன. தாவர இனங்களும், மனித இனமும் இவ்வோவியத்தில் உயிர்த்தெழுவதுபோல் தோன்றும். பின்புல காட்சிகளாக மலை, ஆறு, நிலம் காட்சி தருகிறது. மரபு வழியிலிருந்து மாறிய புதுவிதமான கருத்தமைவுக் குறியீட்டு ஓவியமாய் லெடா விளங்கியது.

லெடா ஓவியங்களில் நிற்கும் லெடா, மண்டியிட்டுள்ள லெடா என்ற இரண்டுவித ஓவியங்கள் லியனார்டோ வரைந்ததற்கான அறிகுறிகளாக அவனது கோட்டோவியங்கள் காணப்படுகின்றன.
தற்போது கிடைக்கப்பெறாத இதன் மூலம் ஓவியங்கள் பற்றிய பல்வேறு விமர்சனங்களும், சான்றுகளும் வந்தவண்ணம் உள்ளன. அனனிமோ காடியானா, லோமாசா போன்றவர்கள் இவ்வோவியத்தைப் பற்றி எழுதிய குறிப்புக்களெல்லாம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் மூல ஓவியம் 1874 இல் பாரீஸ் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டதாகவும், பலர் கைக்கு மாறிய இவ்வோவியம் இரண்டாம் உலகப் போரின் போது காணாமற்போய் மீண்டும் இத்தாலிய அரசு இதைக் கைப்பற்றியதாகவும் கூறுவார்கள்.

லெடா ஓவியத்தை லியனார்டோ ஒரு திடீர் ஊக்கத்தினால் வரைந்திருக்கக் கூடுமென்றும், இவ்வோவியத்திற்கு ஒருவித கலாச்சாரப் பின்னணியான விளக்கங்கள் தேவையில்லை என்றும் சில விமர்சகர்கள் கருதுகின்றனர். தனக்கென்று குறியீட்டான தனி நடையைப் பெற்ற இவ்வோவியத்தில் லெடா எனும் நங்கை வீனஸாக இருப்பாளோ, அல்லது எஸிபஸ்ஸின் டயானாவாய் இருப்பாளோ என்று எண்ணும்படியாக வரையப்பட்டிருந்தது. இவ்வுருவின் சூட்சமத்தை அறிந்தவர்கள் லியனார்டோவை ஒரு மாந்திரீகவாதி யென்றே அழைத்தனர். இவ்வோவியம் அக்காலத்தில் வாழ்ந்த கலைஞர்களான ரபேல் மீதும், மைக்கலேஞ்சலோவின் மீதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. லெடா ஓவியத்தில் மனதைப் பறிகொடுத்த ரபேல் அதன் பாதிப்பில் கலிடாவின் வெற்றி எனும் பூச்சோவியம் ஒன்றைச் செய்தான்.
அந்திம உணவு
மிலானில் உள்ள சாந்தா மரிய டெல்ல கிரேசியின் சுவர்களில் அந்திம உணவு எனும் ஓவியம் வரைந்தான் லியனார்டோ. மனித உடற்கூறுகள், அதன் அசைவுகள் பற்றியும், மனித முகபாவங்கள் அதன் உணர்வுகள் இத்துடன் ஒளி நிழல், வெளி, தூரத்தன்மை ஆகியவைபற்றியெல்லாம் தாம் ஆய்ந்தறிந்தவற்றையெல்லாம் திறம்பட வெளிப்படுமாறு இவ்வொவியத்தை வரைந்திருந்தான் லியனார்டோ. இதன் சுவர்களின் ஒருபுறம் பிரமண்டேயும் எதிர்புறம் டொனடாடா மாண்டர்போனா எனும் ஓவியன் இயேசுவை சிலுவையில் அறையும் ஓவியம் ஒன்றையும் வரைந்து கொண்டிருந்தனர். அந்தம் உணவு எனும் இவ்வோவியத்தை விரைவில் முடித்துவிட்டு மற்ற சுவரோவியங்களையும் லியனார்டோவே செய்யவேண்டுமென்று இரண்டாம் மொரா கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
இவ்வோவியத்தில் இயேசு நடுநாயகராக அமைதிதவழும் முகத்துடன் காணப்படுகிறார். இயேசுவின் தலைக்குப் பின்புறம் வானத்திலிருந்து முருதுவான வெளிச்சம் ஜன்னல்களின் பின்புலமாக அமைய இயேசுவின் முகத்தில் ஒளியை அள்ளி வீசுகிறது.

இயேசுவைச் சுற்றி உள்ள அபோஸ்தலர்கள் தங்களில் யார் ஒருவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்க உள்ளான் என்பதை அறியும் வியப்புடன் தோற்றமளிக்கின்றனர். இயேசுவின் இடதுபுறம் ஒன்றும், வலது புறம் இரண்டுமாக மூன்று குழுவினராக அபோஸ்தலர்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் வினவியும், இரகசியம் பேசியும் வியப்புடன் உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.
அப்போஸ்தலர்களில் ஒருவன் குடித்துவிட்டு கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு இயேசுவை நோக்கி தலையை திருப்பியுள்ளான். மற்றொருவன் தனது இருகரங்களையும் இணைத்துக் கொண்டு புருவத்தை தூக்கிப் பார்த்த நிலையில் உள்ளான். ஒருவன் இரண்டு கைகளையும் காட்டிய நிலையில் ஆச்சரியத்துடன் பார்க்கிறான். ஒருவன் தனதருகில் உள்ளவன் காதில் ஏதோ கூறுகிறான். அதனை மற்றவன் காது கொடுத்துக் கேட்கிறான். ஒருவன் தன் ஒருகையில் கத்தியும், மற்றொரு கையில் ரொட்டித் துண்டும் வைத்திள்ளான். ஒருவன் மேஜைமீது கைகளை ஊன்றி உற்றுப் பார்க்கிறான். இவ்வாறான பல்வேறு மனநிலை உள்ள அபோஸ்தலர்களுக்கிடையில் இயேசு சாந்தமான முகபாவத்துடன் காணப்படுகிறார்.
இவ்வோவியத்தின் வடிவமைப்பில் உள்ள பிரகாசத்தன்மை ஆச்சர்யம் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது. ஜன்னல்களின் திறப்பிலிருந்து வெளியே தெரிகின்ற வான்வெளியின் பிரகாசம் வெளியைப் பிரகாசப் படுத்துவதால் இயேசுவின் முகத்தில் சாந்தம் ஒரு சூர்யப்பிரகாசமாய் ஒளிர்விடுகிறது.

இவ்வோவியத்தில் வரையப்பட்டுள்ளன ஒவ்வொரு முகபாவமும் உணர்வு பூர்வமாகவும், ஒருவித ஆன் மீகத் தேடலுடனும் காணப்படுகின்றது. படத்தில் உள்ள ஒவ்வொரு பொருட்களின் பொருண்மையைச் சித்திரிக்கும் போதும் பின்புலமாய் உள்ள வானவெளியைக் காட்டும் போதும், அதன் தூரத்தன்மையைக் காட்டும்போதும் ஒருவித ஜியோமிதிநுட்பத்துடன் உருவங்களின் வடிவமைப்பை கொணர்ந்துள்ளான் லியனார்டோ.
லியனார்டோ இவ்வோவியத்தை எண்ணெய் வண்ணங்களால் செய்யவில்லை. ஒருவித வெண்வண்ணங்களால் இவ்வோவியத்தைச் செய்துள்ளான். சுற்றுப்புறத்தின் ஈரங்காத்தத் தன்மையாலும், வெண்களிமண்பூசி இரண்டு அடுக்குகளாயிருப்பதாலும் இவ்வோவியத்தில் உள்ள வர்ணக் கற்றைகள் உதிரத் தொடங்கின. இவ்வோவியம் லியனார்டோ வரைந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே சிதிலமடையத் தொடங்கிவிட்டது. சிதிலமடைவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று முனைந்த சிலரது அவசர ஆலோசனைகளாலும் இவ்வோவியம் மீண்டும் மிக மோசநிலையை அடையத் தொடங்கியது. 1517இல் இவ்வோவியத்தை பார்வையிடுவதற்காக தனது கார்டினஸ் லூயிஸுடன் வந்த அந்தோனியா டி பீட்டிஸ் என்பவர் சுவரின் இறுக்கமற்றத் தன்மையாலும், சுற்றுச் சூழலாலும் இவ்வோவியம் அழியும் தன்மையை அடைந்துள்ளதாகக் கூறினார். ஓவிய விமர்சகர் வாஸரியும் லொமாசாவும் இந்த சீரழிவிற்கு லியனார்டோவையேக் குற்றம் சாட்டினார். புதுவித தொழில்நுட்பத்துடன் செய்வதாக நினைத்துக் கொண்டு இவ்வோவியத்தை லியனார்டோவே பாழ்படுத்திவிட்டான் என்றனர்.

ரோமில்
கடைசி நாட்களில் லியனார்டோவின் மனம் தனித்து இயங்க ஆரம்பித்தது. மிலானில் நிலவிய அரசியல் மற்றும் இராணுவம்ச் சூழல் லியனார்டோவுக்கு ஏற்றதாக இல்லை. 1511 ஆம் ஆண்டு வாக்கில் லூயிஸ்கள் மிலானைவிட்டு வெளியேறும்படியாக நேரிட்டபோது தன் வாழ்க்கை மீண்டும் சிக்கலானதாக உணர்ந்தான். மிலானில் மெடிசி மீண்டும் தேர்வு செய்யப்பட்டபோது அவனது நம்பிக்கை காப்பாற்றப்பட்டன. பிரான்சில் கொஞ்ச காலம் தங்கிவிட்டு லியனார்டோ ரோமிற்கு மீண்டும் வந்தான். அங்கு வாடிகன் நகரில் தனது நண்பன் பிரமண்டேவால் கட்டப்பட்ட பெல்விடிரி அரண்மனையில் தங்கினான். அங்கு லியனார்டோவிற்கு நண்பர்களும், ஆலோசகர்களும் மிகச் சிலராக இருந்தனர். பெம்போ அல்லது பிபியனா போன்றோர்களிடம் கூட கருத்துக்கள் பரிமாறிக் கொள்வதென்பது மிக அறிதாகவே நிகழ்ந்தது. அப்போது ஓவியன் ரபேல் ஒரு கலைப்பட்டறை உருவாகி அதில் மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தான். இப்போதெல்லாம் லியனார்டோ போன்றொரது பன்முகத்தன்மைகளைப் பாராட்டுவோர் அவ்வளவாக இல்லை. அதனால் மனச் சோர்வடையாத லியனார்டோ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிலானில் ஆரம்பிக்கப்பட்ட கணித, ஜியோமிதி ஆய்வுகளை மீண்டும் தொடங்கினான். வானவியல், நீரியல், அண்டவியல் போன்ற ஆய்வுகளிலும் அக்கறை கொண்டிருந்தான். பண்பாடு, கற்பனை போன்ற மதிப்பீடுகளில் நம்பிக்கை அற்றவனாகக் காணப்பட்டான். இறக்கும் அடிமை, புரட்சிகர அடிமை மோசஸ் போன்ற படைப்புக்களில் லியனார்டோவின் அறிவியல் தாக்கத்தைக் காணலாம். பெருவெள்ளம் எனும் ஓவியம் செய்தபோது சற்று கற்பனை மிகுதியாக காணப்படும் இக்காலங்களில் அண்டவெளியின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதும், படைப்புக்கும், அழிவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதும், லியனார்டோவின் கருத்தாக இருந்தது.
லியனார்டோவின் கடைசிக் காலங்கள்
மன்னன் முதலாம் பிரான்சிஸ் லியனார்டோவின் நெருங்கிய நண்பன் மட்டுமல்ல. அவனது பரம ரசிகனும் ஆவான். லியனார்டோவின் கடைசிக் காலங்களில் அவன் தன் அருகில் இருப்பதை விரும்பினான் மன்னன் பிரான்சிஸ். தன்னோடு வந்து தங்குமாறு லியனார்டோவிற்கு அழைப்பும் விடுத்தான் பிரான்சிஸ். லியனார்டோவிற்கும் பிரான்சிஸ்ஸோடு இருப்பது பிடித்திருந்தது. தன் கலைப்படைப்புக்களை ரசிக்கும் மன்னம் அருகில் வாழ்வதை தன் பாக்கியமாகக் கருதினான் லியனார்டோ. மன்னன் பிரான்சிஸும் முறைப்படி லியனார்டோவை அரசாங்கக் கலைஞனாகவும், பொறியியல் நிபுணனாகவும் நியமித்து அவனைக் கௌரவப்படுத்தினான். பதவியினை ஏற்ற கையோடு சில அந்தப்புர கட்டிடங்களுக்கான சில வரைபடங்களை வரைந்து கொண்டிருந்தான் லியனார்டோ. சேன் செவிரினாவில் நடைபெறும் விளையாட்டிற்கான உடைகளின் கோட்டோவியங்கள் கூட சில செய்து கொடுத்தான்.


தன் கைகள் வலுவிழப்பதை உணர்ந்த போதும் லியனார்டோவால் ஏதேனும் வரைந்து கொண்டிருக்க முடிந்தது. சலைவனாவும் மெல்சியும் எப்போதும் அவனுக்குத் துணையாக இருந்து கொண்டிருந்தனர். மெசுரினா எனும் பணிப்பெண் லியனார்டோ இட்ட வேலைகளைக் கவனமாகச் செய்துகொண்டிருந்தாள். டீ பீட்டிஸ் தனது கார்டினல்களுடன் ஒருமுறை வந்த பார்த்தபோது லியனார்டோவின் வலதுகை பாரிச வாயுவினால் பாதிக்கப்பட்டு வலு முழுதும் இழந்திருந்தது. அப்போதும் அக்கை ஏதோ கிறுக்கி வரைவதற்காக அசைய முற்பட்டது.
மரணம் தனக்கு மிகச் சமீபத்தில் வாய்த்துவிடும் என்பதை உணர்ந்த லியனார்டோ தன் உயிலையும் ஒரு வழியாக எழுதி முடித்தான். உயிலை எழுதி முடித்த கையோடு தன் கைவசமிருந்த கைப்பிரதிசளையும், தன் ஆவணங்களையும் மிலான் நகரத்து பெருந்தகையாளன் மெல்சியிடம் ஒப்படைத்தான். தான் உடுத்தியிருந்த கவுன், தன் தலைக்குல்லாய் இவற்றுடன் இரண்டு டூக்கெட்டுக்கள் பணத்தையும் சேர்த்து பணிப்பெண்ணிடம் அன்போடு கொடுத்தான். பெற்றுக் கொண்ட மெசுரினாவின் கண்களில் நீர் அரும்பியது. மிலானில் தனக்குச் சொந்தமான பழத்தோட்டம் ஒன்றை பட்டிஸ்டா டி வில்லனிஸ், சலைனா என்ற தம் வேலையாட்கள் பகிர்ந்து கொள்ளுமாறும், பிரான்சில் தனது வைப்புத் தொகையாக இருந்த 400 சூடிப் பணத்தை தன் வளர்ப்புச் சகோதரர்கள் எடுத்துக் கொள்ளுமாறும் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1519 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதியன்று அம்பாய்ஸ் எனும் இடத்தில், தன் ரசிகன் மன்னன் பிரான்சிஸ் மடி மீது தலைவைத்து உயிர் நீத்தான் லியனார்டோ டாவினிசி.
வரலாற்றுப் புகழ் மிக்க ஓவியனும், பொறியியல் நிபுணனும், அறிவியல் அறிஞனுமான லியனார்டோ டாவின்சி தனது கலைப் படைப்புக்களை தினமும் உபாசித்து வரும் மன்னன் பிரான்சிஸ் மடிமீது இறந்ததை இங்கிரஸ் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியர்களெல்லாம் பின்னாட்களில் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஒவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை.
1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.
இவருடைய கலைத்துவ வேலைகளிலும் பார்க்க அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி விம்ப எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார்.
அறிவியல் சம்பந்தமான இவரது அணுகுமுறை அவதானிப்பு சார்ந்தது. விபரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். சோதனைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விபரமான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு லத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், லியோனார்டோ என்ற விஞ்ஞானி அக்கால அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்டார்.
1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.


Comments