ஊழலில் முதலிடம்

இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
சி.எம்.எஸ் இந்திய நிறுவனம் 2018 ஆண்டில் ஊழல் நிறைந்த மாநிலங்கள் எது என்பது குறித்து ஊழல் ஆய்வு 2018 என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வானது, ஆந்திரா, பீகார், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடத்தப்பட்டது.
இந்த மாநிலங்களில் செயல்படும் 11 அரசு சேவை துறைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், காவல் துறை, மின்சாரம், குடிநீர் வாரியம், போக்குவரத்து, நில ஆவணங்கள் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் ஊழல் நடப்பதாக ஆய்வின் முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
ஊழல் பட்டியலில், மற்ற மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளி ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்வது, ஆதார் அட்டை பெறுவது, வாக்காளர் அட்டைப் பெறுவது பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பொதுமக்களுக்கான அரசு சேவைகளை வழங்க அதிகளவில் லஞ்சம் பெறும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தை அடுத்து தெலங்கானா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Comments