தமிழனுக்கு உயிர் போனால் என்ன? ஸ்டெர்லைட் படுகொலையை கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு- 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடாமல் தவிர்த்து வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு பெரிய அரச பயங்கரவாதம் நடந்து இருக்கும் போது, வடஇந்திய ஊடகங்கள் உலகமே அமைதியாக இருப்பது போல செய்தி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது. 


எப்போதுமே

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். ஆனாலும் இதுகுறித்து இதுவரை தேசிய ஊடகங்கள் வாய்திறக்கவே இல்லை. ஒரு செய்தி கூட இல்லை நேற்று நடந்த படுகொலை உச்சத்தில் இருந்த போது கூட வடஇந்திய செய்தி சேனல்கள் இதுகுறித்து செய்தி வெளியிடவில்லை. மிகவும் காலதாமதமாக பெயருக்கு, நாங்களும் செய்தி போட்டுவிட்டோம் என்ற பாணியில் பலி எண்ணிக்கை குறித்து செய்தி வெளியிட்டார். ஆண்டாள் பிரச்சனைக்கு நடந்த போராட்டத்தை தேசிய அவலம் போல பேசிய சிலர் ஆங்கில ஊடகங்கள் கூட, இந்த அரசு படுகொலையை பற்றி வாய் திறக்கவில்லை. எப்போதுமே இந்த வடஇந்தியா ஊடகங்கள் இதற்கு முன்பும் இதேபோன்ற வேலையை பார்த்துள்ளது. சென்னை வெள்ளத்தால் மூழ்கிய போது, இரண்டு நாள் கழித்து வந்து நலம் விசாரித்தது, மெரினா போராட்டம் பற்றி வாய்திறக்காமல் இருந்தது, மாணவர்கள் ஈழப்போராட்டம் நடத்திய போது அவர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்தது. தமிழகத்தில் இருக்கும் ஒருவருக்கு காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை என்னவென்று தெரியும், ஆனால் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனை சென்னையின் எல்லை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திற்கும் தெரியக் கூடாது என்று இந்த ஊடகங்கள் கவனமாக பார்த்துக் கொள்கிறது. தமிழகத்தை கண்டுகொள்ளாதா? தொடர்ச்சியாக இந்த ஊடகங்கள் தமிழகத்தை புறக்கணித்துக் கொண்டேதான் வருகிறது. எல்லா வடஇந்திய ஊடகங்களுக்கு தமிழகத்தில் செய்தியாளர்கள் இருக்கிறார்கள். அதில் சில செய்தியாளர்கள் மிகவும் பிரபலமான திறமை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் இருந்தும், தமிழகத்தில் நேற்று நடந்த கோர படுகொலையை பற்றி ஒரு வடஇந்திய செய்தி சேனல் கூட வாய்திறக்கவில்லை. இதெல்லாம் செய்தியே இல்லை என்பது போலத்தான் 12க்கும் அதிகமானோரின் கொலையை அவர்கள் பார்க்கிறார்கள். எதை பற்றி தற்போது வடஇந்தியா ஊடகம் முழுக்க கர்நாடக அரசியல் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரு பேஸ்புக் நண்பன் இன்னொரு பெண்ணை கொன்றதை பற்றி செய்தி வெளியிட்டு இருக்கிறது. செய்தி நிறுவனங்களின் எந்த இணைய பக்கத்திலும் பத்தாவது செய்தியாக கூட இந்த ஸ்டெர்லைட் படுகொலை இல்லை. காலையில் இருந்து ஒளிபரப்பட்ட செய்திகளிலும் அவர்கள் இதை பற்றி பேசவில்லை. இந்த படுகொலை இந்தியாவின் பிறபகுதிக்கு தெரியாமலே பார்த்துக்கொள்கிறார்கள். பெயர் ஒன்றுதான் குறைச்சல் தென்னிந்தியாவை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாத, ஆங்கில ஊடகம் என்று பதிவு செய்துவிட்டு பாதி நேரம் ஹிந்தியில் பேசும் வடஇந்திய ஊடகங்கள்தான் தங்களை தேசிய ஊடகங்கள் என்று வெட்கமே இல்லாமல் அழைத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தமிழகம் எக்கேடு கெட்டுப்போனாலும் கவலை இல்லை என்பது போலத்தான் இதுவரை இருந்துள்ளனர். இனியும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் அப்படித்தான். 

Comments