ராணுவமயமாகும் தமிழகம், 8 வழி சாலையின் நிஜ முகம் - அதிரவைக்கும் தகவல்கள்

8 வழி சாலை என பொதுவாக சொல்லப்பட்டாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 4 வழிகள் மட்டுமே. மீதி 4 வழிகளும் நிறுவனங்களின் பிரத்யேக பயன்பாட்டிற்கே.

8 வழி சாலையின் இருபுறங்களிலும் கடைசி.., அதாவது 4வது வழியை ஒட்டி மிகப்பெரிய அளவில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட உள்ளன.
இதனால் சாலையின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர்களுக்கு அப்பால் உள்ள கிராமவாசிகள் எங்கும் எளிதில் செல்ல முடியாது. பல கிலோமீட்டர் தூரம் சுற்றிப்போக வேண்டிய நிலை ஏற்படும்.

எளிய பின்னணி கொண்ட கிராம மக்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் அநேகம். தொடர் நெருக்கடிகளால் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் மக்கள் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், அரசு கொடுக்கும் சொற்ப இழப்பீட்டுத் தொகைக்கு தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்கு நகரும் சூழ்நிலை உருவாகும்.

அத்தகைய காலக்கட்டத்தில் அந்த நிலங்களையும் கையகப்படுத்தி, அதை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து முழுக்க தனியார் பங்களிப்புடன் குறிப்பிட்ட இடைவெளியில் ராணுவத் தளபாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பது என்பதுதான் இன்றைய மோடி அரசின் நீண்டகால திட்டம்.

இந்த வகையில் சென்னை- சேலம் இடையே அமையவிருப்பது 8 வழி சாலை அல்ல, ராணுவத் தளபாட தொழில் காரிடார்.
மொத்தத்தில் தமிழர்களின் மரபுவழி தொழில்களையும், பாரம்பரிய கலாச்சார அடையாளங்களையும், வாழ்வாதாரங்களையும் அழித்துவிட்டு தமிழ்நாட்டை ராணுவ உற்பத்திக் களமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சேலம் கஞ்ச மலையிலும், திருவண்ணாமலை கவுத்தி மலையிலும் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்குமளவிற்கு அங்கே இரும்புத்தாது கொட்டிக்கிடக்கிறது. இதன்மூலம் பல லட்சம் கோடிகள் லாபம் அடைய முடியும்.
இந்த பின்னணியில்தான் இரும்புத்தாதுக்கு குறிவைத்திருக்கும் ஜிண்டால் நிறுவனம், இப்போதே பணத்தை வாரியிறைக்க ஆரம்பித்துவிட்டது.

வழக்கமாக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ‘ மேலிடத்திலிருந்து’ அளிக்கப்படும் ’கமிஷனை’ தற்போது ஜிண்டால் பொறுப்பேற்று முதல்கட்ட பட்டுவாடாவையும் முடித்துவிட்டது.

ஒவ்வொரு எம்.பி, எம்.எல்.ஏவுக்கும் 3 முதல் 5 கோடிகள் வரை தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. 8 வழி சாலை அமையவிருக்கும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதலாகத் தரப்பட்டுள்ளது.
இது தவிர தலைமைப் பீடத்தில் உள்ள குறிப்பிட்ட சில பிரமுகர்களுக்கு முதற்கட்டமாக அவர்களே எதிர்பார்க்காத ஒரு பெரும் தொகையை ஜிண்டால் வாரி வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.


Sourse : http://www.punnagai.com/tamilnadu/the-real-face-of-the-8-way-road

Comments

Popular Posts