உங்களுக்காக...
இந்த கண்ணதாசன் கண்ணதாசன்னு
ஒருத்தர் இருந்தாரு, இருக்காரு,
இருப்பாரு!
அவரு ஆயிரக்கணக்கான தத்துவங்களை
திரைப்பாடல்கள், கவிதைகள்,
புத்தகங்கள் என எல்லா விதத்திலும்
எல்லா வடிவங்களிலும் சொல்லிட்டு
போயிருக்காரு,
அவரோட தத்துவங்களை எல்லாம்
பாடல்களாக கேட்கும்போதோ
புத்தகங்களாக படிக்கும்போதோ
ஆஹா, ஓஹோன்னு அப்படியே
பிரம்மிச்சி போயிடுவோம், போயிடுறோம்.
இதுல ஆத்திகவாதி, நாத்திகவாதின்ற
பாகுபாடு எல்லாம் இல்ல.
ஆத்திகவாதிகள் அவரோட
அத்தனை தத்துவங்களையும்
முழுமையா நம்புவாங்க,
நாத்திகவாதிகள் அவரோட எல்லா
கருத்துக்களையும் ஏத்துக்கிட்டாலும்,
தலையில வச்சி கொண்டாடுனாலும்
இறைவன் இருக்கிறான் அப்படின்னு
அவர் சொல்லும்போது மட்டும்
சேச்சே அப்படியெல்லாம் இல்லன்னு
மறுத்துடுவாங்க...!
இதுல ஒரு டவுட்டு என்னென்னா,
இத்தனை கருத்துக்களை
கண்ணதாசன் சொல்லும்போது
ஆஹா ஓஹோ, கண்ணதாசன் மாதிரி
ஒரு அறிவாளியை பாக்கவே முடியாது,
நம்மல்லாம் அதுல ஒரு சதவீதம் கூட
இல்லன்னு தலையில வச்சி கொண்டாடுறவங்க,
கண்ணதாசன் கடவுள் இருக்காருன்னு
சொல்லும்போது மட்டும் அப்படியெல்லாம்
எந்த கடவுளும் இல்லன்னு
டக்குனு கண்ணதாசனை விட
நாம தான் அறிவாளின்னு முடிவு
பண்ணிடுறோமே அது எப்படி?
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான
99 கருத்தை சொன்னவன்,
ஒரு கருத்தை மட்டும் எப்படி
முட்டாள்தனமாக சொல்லுவான்,
99 கருத்தை சொல்லும்போது
முட்டாளாக இருந்தவன்
டக்கென்று ஒரு கருத்தில் மட்டும்
எப்படி ஞானியாகிவிடுகிறான்,
உண்மையில் இதில் யார் முட்டாள் ?
எனக்கு தெரிந்து கண்ணதாசன்
முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை,
அங்கு ஏதாவது இருக்கிறதா இல்லையா
என்று தேடிப்போய் பார்க்கக்கூட
பொறுமையில்லாமல் அதற்கான
முயற்சியில் கொஞ்சமேனும் இறங்கி
அப்படி என்னதான் இருக்குன்னு
குறைந்தபட்ச ஆராய்ச்சியில் கூட
இறங்காமல், எல்லோரும்
சொல்வதை பார்த்து,
நாமாக ஒன்றை நினைத்துக்கொண்ட
ு,
நாமாகவே ஒரு முடிவெடுத்துவிட
்டு,
அதெல்லாம் சும்மா,
ஊரை ஏமாத்துறாங்க கடவுள் பேரை
சொல்லி என்று பொத்தாம்பொதுவாக
ஒரு முடிவுக்கு வருவதில்
அவ்வளவு அறிவுத்தன்மை இருப்பதாக
தெரியவில்லை,
மலை உச்சியில் குளுமையாக
இருக்குமா இல்லை வேர்த்துகொட்டுமா
என்பதை இவர்கள் கீழிருந்தே எப்படி
முடிவு செய்கிறார்கள் என்று
நினைக்கும்போது தான்
சின்னப்புள்ளத்தனமா இருக்கே
என்று தோன்றும்..!
— # அஷோக்குமார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து

Comments
Post a Comment