நாத்திகம்
32 மாவட்டங்களை கொண்டது தமிழ்நாடு!
தமிழ்நாட்டைப்போல்
29 மாநிலங்களை கொண்டது இந்தியா!
இந்தியாவைப்போல்
192 நாடுகளையும்,
85 கடல்களையும்
180497 தீவுகளையும் கொண்டது இந்த பூமி !
இந்த பூமியைப்போல் பத்துக்கும் மேற்பட்ட கிரகங்களையும் சூரியனையும் கொண்டது ஒரு சூரியகுடும்பம்!
எத்தனையோ சூரியகுடும்பங்களை கொண்டது இந்த பிரபஞ்சம்!
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தின் மூலம் யார்?
----------------------------
மிகக்குறைந்த
புவிஈர்ப்பு சக்தி கொண்ட சந்திரனில் நடக்க முடியாது பறக்கத்தான் முடியும்,
மிக அதிக புவிஈர்ப்பு சக்தி கொண்ட வியாழனில்
நிற்க மட்டுமே முடியும் நடக்கமுடியாது
நடக்கவும் ஓடவும் பறக்கவும் தேவையான அளவு புவிஈர்ப்பு சக்தியுடன் படைக்கப்பட்டது
பூமி மட்டுமே!
மரங்கள், செடிகொடிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, பாலூட்டிகள், பூச்சிகள், என
கோடிக்கணக்கான வகைகளில் மாறுபட்ட
உடல் கூறுகளை கொண்ட உயிரினங்கள் இருந்தாலும்
எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்படியான உணவாகவும் ஆதாரமாகவும்
நீரை படைத்தது யார் ?
வெவ்வேறு சீதோஷ்ண நிலைகளில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தாம் வாழ்கின்ற சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு தமது உடலை வடிவமைத்துக்கொள்கிற அந்த உன்னத சக்தியை ஒவ்வொரு செல்லுக்குள்ளும் அமைத்தது யார்?
எத்தனையோ ரசாயனங்கள் நிரம்பிய சூரியக்கதிர்களை வடிகட்டி உயிர்களுக்கு தேவையான சரியான ஒளிசக்தி மட்டுமே கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்ட
அந்த ஓசோன் படலத்தை எந்த விஞ்ஞானி படைத்தார்?
அத்தனை கிரகங்களும் எப்படி ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல்
ஒரே வேகத்தில்
ஒரே பாதையில்
ஒரே ஒழங்கான திசையில் சுற்றிவருகின்றன,
எந்த சக்தி அவற்றை இயக்குகிறது,
ஒரே ஒரு செகண்ட்
பூமி தன் ஈர்ப்புவிசை யை இழந்தால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்
192 நாடுகளும்,
85 கடல்களும்,
180497 தீவுகளும்
ஒரே ஒரு நொடியில் சில்லுசில்லாய் காற்றில் பறக்கும், அடுத்த நோடியே அந்த ஈர்ப்பு விசை திரும்பி வந்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வர 500 கோடி ஆண்டுகள் தேவைப்படும்,
இவ்வளவு பெரிய புவிஈர்ப்பு சக்தியை பூமிக்குள்
யார் வைத்தது? கடவுள்
இல்லையென்று யார் வேண்டுமானாலும்
சொல்லலாம் அதற்கு எந்த அறிவும் தேவையில்லை,
இரண்டு அங்குல நாக்கு போதும், ஆனால் இல்லை என்று சொல்கின்ற இடத்தில் என்ன இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்!
எல்லாம் science என்பது அரைகுறை அறிவு,
இந்த மாபெரும் படைப்புக்கு பின்னால் இருக்கும் மூலத்தை தேடும் சக்தி மட்டுமே மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, அவன் தேடி முடிப்பதற்குள், சூரியனில் எரிந்துகொண்டிருக்கும் ஹீலியம் வாயுக்களால் சூரியன் வீங்கி பன்மடங்கு பெரிதாகி வெடித்து சிதறி இந்தபிரபஞ்சமே சாம்பலாகும்! அந்த சாம்பலை பார்க்கக்கூட நாம் இருக்கமாட்டோம், ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மூலமான அந்த சக்தி அங்கேயே தான் இருக்கும்!!
அற்ப ஆயுளை கொண்ட நாம் தான் இப்படி அகங்காரத்தோடு ஆடிக்கொண்டிருக்கிறோம்
கோடிக்கணக்கான வருடங்களாக இயங்கிக்கொண்டு இருக்கும் அந்த சக்தி அமைதியாகத்தான் இருக்கிறது, அந்த மாபெரும் சக்தியின்
கடவுள் தன்மையை நமக்குள்ளும் விதைத்து நம்மையும் அந்த சக்திக்குள் ஒருவராக்க முயலும் கடவுளையே இல்லையென்று
சொல்பவர்கள் ஆயிரம் வடிவேலுக்கு சமம்!
கடவுளின் உருவான ஆயிரம் கோடி ஆத்மாக்களில் நாமும் ஒருவர், நமக்குள் செலுத்தப்பட்ட ஆத்மா புனிதமாகும் வரை நாம் பிறப்பெடுத்துக்கோண்டே இருப்போம், ஆத்திகர் நாத்திகர் யாராக இருந்தாலும் நான் என்கின்ற அகங்காரம் அழியும்போது தான்
நாம் செல்லவேண்டிய திசையின் இருள் விலகும்
இருள் விலகினால் மட்டுமே இருப்பதை காணமுடியும்
இருப்பதை காணும் முன் இல்லை என்பது முட்டாள்தனம்!
#அஷோக்குமார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து...

Comments
Post a Comment