ஜிமெயிலில் தேவையற்ற விளம்பரங்களை நீக்க

இன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது!
இன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது
தேவையற்ற விளம்பர மெயில்களைத் தடுப்பது எப்படி?
Gmail
வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது இணையம். இ-மெயில் இல்லாமல் இன்று எந்த வணிகமும் இல்லை. உறவுப் பரிமாற்றம் தொடங்கி பணப்பரிமாற்றம் வரை எல்லாமே இ-மெயிலில்தான் நடக்கின்றன. அதேநேரம், இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர மெயில்கள் வந்து குவிகின்றன. அவற்றை நீக்குவதே பெரிய வேலையாக இருக்கிறது.
gmail inbox
gmail
``என்னுடைய மின்னஞ்சலுக்குத் தேவையில்லாத முகவரியிலிருந்த
ு தினமும் விளம்பர மெயில்கள் வருகின்றன. இதில் பாதிக்குமேல் எனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதவை. இவற்றைத் தடைசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா?" என்பதுதான் அவருடைய கேள்வி.
நிச்சயம் வழி இருக்கிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிரு
ந்து மட்டும் தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தால் அதன் `Mail List'-லிருந்து `Unsubscribe' செய்துகொள்ளலாம். ஆனால், நிறைய நிறுவனங்களிடமிர
ுந்து மின்னஞ்சல்கள் வரும்பட்சத்தில், ஒவ்வொன்றாக இப்படிச் செய்வது கடினம். இதற்குப் பதிலாக `Unroll.me' என்ற தளத்திற்கு சென்று, நம் ஜிமெயிலை வைத்து லாகின் செய்தால், ஒட்டுமொத்தமாக இதுவரை எந்தெந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன என்பதை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Unroll Me
உடனே அவற்றை அங்கேயே `Unsubscribe' செய்துவிடவும் முடியும். இதைச் செய்வதற்கு `Unroll' சேவையானது உங்கள் ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்தும். அதை சில வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும். இதைத் தெளிவாகவே குறிப்பிட்டுவிடுகிறது `Unroll me'. இது தொடராமல் இருக்க வேண்டும் என்றால், ஒருமுறை `Unroll me'-ல் மின்னஞ்சல்களை `Unsubscribe' செய்துவிட்டு, உங்கள் ஜிமெயிலின் `Third-party apps with account access' பகுதிக்குச் சென்று `Unroll me'-க்கான Access-ஐ நீக்கிவிடலாம்."

Comments