8.காவிரி

காவிரி மண்ணுக்கு கீழே உள்ள மூல வளங்களின் மதிப்பு 10 லட்சம் கோடி, இது மன்மோகன் ஆட்சிகாலத்து கணக்கு, இப்போ எப்படியும் ரெண்டு மூணு மடங்கு ஏறியிருக்கும், 20 லட்சம் கோடி புழங்க போகிறது என்றால் கட்சி வளர்ச்சி நிதி எவ்வளவு வரும்னு கணக்கு பண்ணிக்கோங்க, .
அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக அதிகாரத்தில் புழங்கும் கட்சிகளுக்கு காவிரியில் இவ்வளவு பெரிய துரோகத்துக்கு பிறகும் ஏன் செல்ப் எடுக்கலைனு விளங்குதா?.
ஓரளவிற்கு மீத்தேன் எல்லாருக்கும் புரிந்து நிறுத்தப்பட்டதாக அறிவிக்க பட்ட பிறகு நடந்த WTO மாநாட்டில் ஹைட்ரோ கார்பன் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
காங்கிரசிற்கு பிறகு வந்த பாஜக மூலம் ஹட்ரோ கார்பனாக மீண்டும் உருவெடுத்து வருவது என்பது காங்கிரஸ் காலத்திலேயே முடிவுசெய்யப்பட்ட ஒன்றுதான், ஆனால் இதெல்லாம் நமக்கு தெரியாது கட்சிகளுக்கு தெரியும்.
அடுத்த 20 வருடங்களில் 30 லட்சம் கோடிகளுக்கு மேல் கார்ப்பரேட்டுகள் கொழிக்க போகிற பெட்ரோலிய மண்டலத்தில் கவுன்சிலராகவோ, வார்டு மெம்பராகவோ, எம்.எல்.ஏ வாகவோ வரப்போகும் ஒருவர் சாதாரணமாக பல கொடிகளை கமிஷனாக பெரும் வாய்ப்பை பெறுவார், அவர் எப்படி சேத்தில் நிற்கப்போகும் விவசாயியாக நிற்பார், அவர் சொந்த சாதியாகவே இருந்தாலும்..
அப்படியென்றால் இந்த மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள கூடிய இந்திய அதிகார வர்க்கத்தோடு தொடர்புகளில் இருக்க கூடிய வாய்ப்புகளை பெற்ற அரசியல் கட்சிகள் எப்படி போராட வருவார்கள்?. காவிரி விவசாயிக்காக நிற்பார்கள்.
காவிரி கொதிநிலைக்கு வராததற்கு பின்னல் இருக்கும் வலுவான காரணம் இதுதான். அரசியல் வாதிகளிடமோ, அவர்களின் கூட்டாளிகளான பிற சாதி சங்கங்களிடமோ, பிற தொண்டு நிறுவனங்களிடமோ வேறு நிறுவனங்களிடமோ கட்டுப்பட்டு கிடைக்கும் மக்கள் அவற்றில் இருந்து இருந்து கிழித்துக்கொண்ட
ு வெளியேறி போராடா விட்டால் மிகப்பெரிய அழிவை சந்திக்க போவது உறுதி.

Comments