ரயில்களின் விவரம் அறிய வாட்ஸ்அப் எண் அறிமுகம்: செல்போனில் உடனுக்குடன் தகவல்

ரயில் பயணிகளுக்கான தகவல் சேவையில் மற்றொரு அம்சமாக வாட்ஸ்அப் எண்ணுடன் கூடிய வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி மூலம் ரயில்கள் குறித்த விவரங்களை துரிதமாக அறிந்து அதற்கேற்ப பயணிகள் ரயில்வே சேவையை பெற முடியும்.
இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் கூறுகையில், ‘ரயில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ரயில்கள் வந்து செல்லும் நேரம் மற்றும் தாமதம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 7349389104 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ரயிலின் விவரம் அறிய சம்பந்தப்பட்ட ரயிலின் 5 இலக்க எண்ணை பதிவு செய்தால் அடுத்த நொடியில் ரயில் குறித்த விவரம் தெரிந்துவிடும். இதன்மூலம் குறித்த நேரத்திற்கு சென்று ரயிலில் பயணிக்கலாம்.
முதற்கட்டமாக ரயில் தாமதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.
விரைவில் வாட்ஸ் அப் மூலமாக ரயில்வே சேவையில் உள்ள பிரச்னைகள், தரமற்ற உணவுகள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்தும் புகார் அளிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது’

Comments