பனிப்பாறைகள் உருகும் நிலையால் ஆபத்தில் கடலோர மக்கள்

உலகில் புவி வெப்பமயமாதல் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் எங்கோ ஒரு மூலையில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் அந்தார்டிகாவில் பனி உருகுவதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக செய்மதி மூலமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிரின் லேண்ட் மற்றும் அந்தார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி வழிந்து வரும் நிலையில் தற்போதைய நிலையை விட கடல் நீர் மட்டம் 2 அடிக்கு உயர வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 25 ஆண்டு செய்மதி ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
கடல் மட்டத்தில் சிறிய அளவில் மாற்றம் நிகழ்ந்தால் கூட கடல் கொந்தளிப்பு, கடல் அரிப்பு போன்றவை ஏற்படும். இதனால் கடலோரம் வசிக்கும் மக்களுக்கு முக்கியமாக சென்னையில் பெரும் இன்னல்கள் விளையும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்

Comments