2 மடங்கு இல்ல... 20 மடங்கு வேகத்தோடு வருது '5 ஜி'

அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் இன்டர்நெட் ஆப் திங்ஸ், ஆட்டோமேஷன், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் போன்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட கண்டுபடிப்புகளை உலகளாவிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பம் மக்களின் இணைய சேவைகளை அதிவேகத்தில் பூரத்தி செய்யும் என எதிர்ப்பார்க்க படுகிறது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நிகரற்ற வேகத்தில் பதிவேற்றம், பதிவிறக்கம், அதிக கவரேஜ் மற்றும் இன்னும் நிலையான இணைப்புகளை மக்கள் அனுபவிக்கலாம்.
5ஜி மொபைல் இணைய இணைப்பு, நாம் இப்போது பயன்படுத்துவதை விட 10 முதல் 20 மடங்கு வேகங்களை தரவல்லது.

இந்த அதிவேக 5ஜி தொழில்நுட்பம் அடுத்த ஆண்டு முதல் தென் கொரியா சீனா ஆகிய நாடுகளில் தொடங்கப்படவுள்ளது.இது தொடர்பான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளில் பல்வேறு நாடுகளின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை (5ஜி) தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் வேகம் 10,000 எம்பிபிஎஸ் ஆகவும், கிராமப்புறங்களில் 1,000 எம்பிபிஎஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

இனி 5ஜி தொழில் நுட்பத்தால் ஓட்டுநர் இல்லாமல் ஓடும் தானியாங்கி கார்கள், இனி டிராபிக் தொடர்பாக மற்றவர்களுடன் பேச முடியும்.
மேலும் 360 டிகிரி விர்சுவல் ரியாலிட்டி விடியோக்கள், அதிக தரத்துடன் கூடிய ஹெச்டி விடியோக்கள் பார்ப்பது எளிதாகும். இனி சாதாரண நகரங்களில் கூட மருத்துவ சேவையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் அதிகமாகப் போகிறது, விஞ்ஞான சேவையில் தகவல் தொடர்பு இன்னும் அதிகரிக்கும் மொழி பெயர்ப்பு மேலும் எளிமையாகும். அத்தனையும் அதிவேக இணையத்தால் ஆச்சர்யப்படப் போகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், எண்ணற்ற கற்பனைக்கு அடங்காத தொழில் நுட்ப விஷயங்களை, இனி மக்கள் தங்கள் எதார்த்த வாழ்க்கையில் காணப்போகிறார்கள். அது தான் 5 ஜி.

Comments