இனி பஸ் ஸ்டாண்டுக்குள் போக பிளாட்பாரம் டிக்கெட் எடுக்கணும் தெரியுமா ? தனியார் மயமாகும் பேருந்து நிலையங்கள் !!

இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்கள் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை மெயின்டெயின் பண்ணுவதற்காக, பயணிகளிடம் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூலம் பணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில்தான் தமிழகத்திலும் ஒவ்வொரு அரசுத் துறையும் தற்போது தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது.இதன் முதல் கட்டமாக கோவை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, திண்டிவனம், மயிலாடுதுறை, நாமக்கல், தர்மபுரி முகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் விரைவில் தனியார் வசம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இந்த நகரங்களில் வுதிய பேருந்து நிலையங்கள், கடைகளுடன் அமைக்கப்பட்டு அவை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 15 முதல் 20 ஆண்டுகளுக்கு அவை ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்படவுள்ளன.
முக்கிய சுற்றுலாத்தளங்கள், கோயில் நகரங்கள் போன்ற ஊர்களில் எல்லாம் இத்திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டும். தற்போது இதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால் இனி நாம் பேருந்து நிலையத்துக்குள் காலடி எடுத்து வைக்க நினைத்தால் பிளாட்பாரம் டிக்கெட் வாங்காமல் உள்ளே நுழைய முடியாது என்பதே உண்மை நிலை. தமிழக அரசின் இத்திட்டத்துக்கு சமூக ஆர்வலர்களும், தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Comments