இதை படிங்க

முன்பெல்லாம் கிராமங்களில் வாழ்ந்திருந்தபோதும்,
இப்போதும் கிராமத்தில் வாழ்பவர்களும்
தங்களது மகனுக்கோ, மகளுக்கோ
திருமணம் செய்ய முடிவெடுத்தால்
அந்த வழி சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு,
இந்த வழி சொந்தத்துல ஒரு பையன் இருக்கான்,
நம்ம வாத்தியாருக்கு தெரிஞ்ச குடும்பம்
நம்பி கொடுக்கலாம் இந்த மாதிரி
ஏதோ ஒரு விதத்தில்,
யாரோ ஒருவரின் மூலமாக
ஒருவருக்கு ஒருவர் உறுதியளித்து
பெரிய தேடல்கள் எதுவும் இல்லாமல்
எளிதாக திருமணங்கள் நடந்துவிடும்,
அதன்பிறகு வேலை தேடி மனிதர்கள் எல்லாம்
நகரங்களை நோக்கி நகர்ந்துவந்த போது
சின்ன சின்ன உறவுகளை கொஞ்சகாலத்திற்கு
தபால் தொடர்புகள் மூலமும், குடும்ப விஷேசங்களிலும் கலந்துகொண்டு
உறவுகள் விட்டுப்போகாத வண்ணம்
பாதுகாத்து வந்தார்கள்,
அடுத்த தலைமுறையினர் பிறந்தது முதலே
நகரவாசிகளாக இருக்க,
நெருங்கிய உறவினர்களின் விஷேசங்களுக்கும்
குலதெய்வ வழிபாடு, திருவிழா போன்ற
விஷயங்களுக்கு மட்டுமே ஊருக்கு செல்வது
என குறைத்துக்கொண்டார்கள்.
நகரம் நோக்கி வந்தவர்களின் வசதிவாய்ப்புகள்
பெருக பெருக சின்ன உறவுகளின் தேவையும்
அவசியமும் இவர்களுக்கு தேவையில்லாத
ஒன்றாக போய்விட்டது,
உறவுகளுக்கு இடையேயான சந்திப்புகள்
அடிக்கடி நிகழாமல் போனதால்
இடைவெளி அதிகமாகிவிட்டது.
நகரத்தில் இருப்பவர்கள் தன்னுடைய
அந்தஸ்து காரணமாக உறவுகளிடம்
நெருங்குவதில்லை,
கிராமத்தில் இருப்பவர்கள் தன்மானத்தின்
காரணமாகவும், தாழ்வு மனப்பான்மை
காரணமாகவும் இவர்களோடு
தொடர்புகொள்வதில்லை,
நகரத்தில் வளரும் குழந்தைகளிடமும்
இவர்கள் உறவுகளின் பெருமைகளை பற்றியோ
கிராமத்தின் மகத்துவத்தை பற்றியோ
சொல்லி வளர்க்காததால் அவர்கள் கூட
ஊருக்கு போலாம் என்றாலே
ஊரெல்லாம் bore dad, entertainment டே
இருக்காது என்ற மனநிலைக்கு
வந்துவிட்டார்கள்.
இவர்களுக்கு திருமணம் என்று வருகிற போது
நகரத்தில் கெட்டுப்போயிருக்கும்
இளைஞர்களை பார்த்து பயந்து
தெரிந்த இடத்தில், உறவுக்கார பெண்ணோ,
பையனோ இருந்தால் நன்றாக இருக்குமே
என்று தேடுவார்கள், ஆனால் அதற்குள்
உறவுகளெல்லாம் இடைவெளியால்
தூரமாகி அந்நியமாகி போயிருப்பார்கள்.
வெறு வழியில்லாமல் மேட்ரிமொனியே
கதி என்று முன்பின் யாரென்றே
தெரியாத நபரை,
உயரம், நிறம், படிப்பு, சம்பளம், வேலை என
எல்லாவற்றையும் பார்த்து,
அவரின் குணம் பழக்கவழக்கங்கள்,
பின்புலம் போன்ற எதுவுமே தெரியாமல்
வேலைக்கு ஆள் எடுப்பதுபோல் எடுத்து
அதனால் நிறைய திருமணங்கள்
தோல்வியிலும் முடிந்து விவாகரத்துக்காக
கோர்ட்டில் நிற்கின்றன,
குடும்ப பிரச்சனைகளை சுமூகமாக பேசி
தீர்த்துவைக்க வேண்டிய நடுநிலை உறவினர்களையும் இழந்துவிட்டு
இவ்வளவு காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதியினர்
இனிமேல் சேர்ந்து வாழ வேண்டுமா
வேண்டாமா என்று யாரோ ஒரு ஜட்ஜ்
எளிதாக தீர்ப்பு எழுதிவிட்டு போய்விடுகிறார்.
உறவுகளின் பலம், பந்தத்தின் பலம்
எதையும் உணராமலேயே
வெறும் ஈகோவினால் எத்தனையோ
வாழ்க்கைகள் பிரிந்து நரகத்தை நோக்கி
போய்கொண்டே இருப்பது வேதனையானது.
உறகளின் இடைவெளியில்
உருவான மேட்ரிமொனி வியாபாரம்
செழித்து வளர்ந்துகொண்டிர
ுக்கிறது
நம்முடைய அறியாமையால்.

Comments