இந்தியாவில் xxx

பல வருடங்களுக்கு முன்பு விபச்சாரத்திற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள், ஐய்யையோ, விபச்சாரமா, இந்தியா எப்பேர்பட்ட நாடு நம்ம கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன என்று ஆ.. ஊ.. என்று குதித்தார்கள், ஆனால் என்ன ஆனது..எங்கோ யாரோ செய்துகொண்டிருந்த விபச்சாரத்தை இன்று குடும்ப பெண்கள் சர்வசாதரணமாக செய்துகொண்டிருக
்கிறார்கள், வெளியூர்களில் வந்து தங்கி படிக்கும் காலேஜ் பெண்கள் பாக்கெட் மணிக்காக விபச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள், அது இப்போது பள்ளி மாணவிகள் வரை வந்துவிட்டது, வேலைக்கும் செல்லும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தகாத உறவுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது, சென்னையில் திருமணமாத பெண்களிடம் ஒரு சேனல் சர்வே எடுத்ததில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு தவறில்லை என்று 30% பேரும், அவரவர் விரும்பினால் தராளமாக வைத்துக்கொள்ளலாம் என்று 50% பேரும், கூடாது என்று சொன்னவர்கள் 20% மட்டுமே, மீடியா முன்னால் வந்து தைரியமாக பெண்களால் இதை சொல்லமுடிகிறது என்றால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம், கலாச்சார சீர்கேட்டுக்கு சினிமா, டிவிக்கள், இன்டர்நெட், நீலப்படங்கள் என்று எத்தனையோ விஷயங்கள் மூலகாரணமாக இருக்கிறது, இதையெல்லாம் ஒழிக்காமல் வெறும் விளைவை மட்டுமே கூடாது என்று வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, நம்முடைய இடத்தில் இருந்து பார்ப்பதைவிட தற்போதைய சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருந்து பார்த்தால் தான் எல்லா விஷயமும் புரியும்,
கலாச்சார சீர்கேடு இப்போது எங்கு வந்து நிற்கிறது, தனிமனித சுதந்திரமா இல்லை கலாச்சாரமா என்ற எல்லையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு கேள்வி கேட்டால் தனிமனித உரிமையும் சுதந்திரமும் தான் முன்னால் நிற்கும்.
நூற்றுக்கணக்கான வருடங்களாக ஓரினசேர்க்கையாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களால் சமுதாயம் சீர்கெடவில்லை, வெறும் 20 வருடமாகத்தான் இன்டர்நெட்டும் டிவியும் அதிக அளவில் மக்கள் மத்தியில் வந்தது, ஆனால் மொத்த சமுதாயமும் நாசமாய் போய்விட்டது, எரிவதற்கு காரணமான கட்டைகளை பிடுங்காமல் அய்யோ தீ அய்யோ தீ என்று அலறுவதில் எந்த பயனும் இல்லை!

Comments