2.0 மறைக்கப்பட்ட காதல் கதை

எத்தனை முறை 2.0 பார்த்திருந்தாலும்
உங்களால் கண்டுபிடிக்க முடியாமல்
போய்விட்ட காதல் கதையும்
இதற்குள் ஒளிந்திருக்கிறது.....
அது என்னவென்று பார்க்கலாம்....
*****&****&*****
எமி ஜாக்சன்:
ஹலோ....சிட்டி, நான் எமி பேசறேன் ...
சிட்டி:
வாவ்....சொல்லு எமி... என்ன திடீர்னு..?
எமி:
நான் கொஞ்சம் தனியா பேசனும்...
சிட்டி:
தனியாவா...? இப்போ எங்க இருக்கே?
எமி:
ஆவடி பக்கத்துல ஒரு செல்போன்
டவர்கிட்ட நின்னுட்டு இருக்கேன்...
சிட்டி :
உன் கூட யாராவது வந்திருக்காங்கள
ா..?
எமி:
இல்ல...
சிட்டி:
உன் பக்கத்துல யாராவது இருக்காங்களா பாரு..
எமி:
யாரும் இல்ல...
சிட்டி:
Sure ...?
எமி:
Sure.. சிட்டி ...
சிட்டி :
அப்புறம் என்ன... already
தனியாதானே இருக்கே.. என்ன பேசணுமே
நீயே பேசிக்க வேண்டியது தானே...ஹா..ஹா..
எமி:
சிட்டி நீ recent டா விஜய் டிவி பார்த்தியா...
சிட்டி:
ஆமாம்...ரெண்டு நாள் முன்னாடி
ஏதோ தப்பா connet ஆகி
கேபிள் கனெக்ஷன் வந்துடுச்சி..
ஆமாம் ஏன் கேக்குறே...
எமி:
இல்ல... அந்த டிவியில தான்
இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம்
சொல்லுவாங்க... அதான் கேட்டேன்..
சிட்டி:
சரி come to the point..என்ன பேசணும்..?
எமி:
கொஞ்ச நாளா உன் பார்வையே சரியில்ல..
நான் போகும்போதும் வரும் போதும்,
என்னையே பாக்குறே...
Studio ல இருக்கிற எல்லோரும்
என்னை வேடிக்கை பாக்குறாங்க....
சிட்டி:
what ... நான் உன்னை பார்த்தேனே...
பொய் எமி .... நான் அந்த மாதிரி பையன் இல்ல..
வசீகரனும் என்னை அப்படி செய்யல...
எமி:
மறைக்காத சிட்டி ....நீ பார்த்தே...
நீ பார்த்ததை நான் பார்த்தேன்..
சிட்டி:
என்ன.. என்ன... என்ன பார்த்தேன்...
எமி:
பொய் சொல்லாத சிட்டி...
நீ என்னை லவ் பண்றே தானே...
நேரடியா சொல்லு...
சிட்டி:
ஆமாம்.. லவ் பண்றேன்... என்ன இப்போ..?
எமி:
அதை ஏன் என்கிட்ட சொல்லல...?
சிட்டி:
அதான் இப்போ சொல்லிட்டேனே...
What next....?
நீ என்னை லவ் பண்றியா இல்லையா...?
எமி:
ஆம்பளை ரோபோ மாதிரி அவ்ளோ சீக்கிரம்
என்னால் பதில் சொல்ல முடியாது..
ஆயிரம் தான் இருந்தாலும்
நான் பொம்பளை ரோபோ...
யோசிச்சி தான் பதில் சொல்லமுடியும்...
சிட்டி:
இதுல யோசிக்க என்ன இருக்கு...
Already என்னோட version என்ன
Capacity என்ன எல்லாமே உனக்கு தெரியுமே...
எமி:
தெரியும்..... அப்படி தெரிஞ்சதால தான்
பிரச்சனை...
சிட்டி :
என்ன பிரச்சனை...
எதுவா இருந்தாலும் சொல்லு
Fix பண்ணிடலாம்...
எமி:
எப்படி சொல்றதுன்னு தெரியல..
நீ சண்டை போடும் போது
ரெண்டு மூணு முறை பார்த்தேன்..
சிட்டி:
ஆமா நீ கூட ஒரு முறை இதயத்தை
கொடுத்து காப்பாத்துனே..
எமி:
ஆனா, அது பிரச்சனை இல்ல...
நீ சண்டை போடும்போதெல்லாம்
முக்கியமான கட்டத்துல வந்து
பேட்டரி போயிடுச்சின்னு படுத்துக்கிறே..
இதே மாதிரி ரெண்டு மூணு இடத்துல
பண்ணிட்டே...
சிட்டி:
ஓ.. அதான் பிரச்சனையா....
இது common தானே பேபி...
நிறைய fight பண்ணும் போது
Energy loss ஆகும்... அதுனால
சீக்கிரமே battery யும் காலியாயிடும்..
திரும்ப ஏத்திகிட்டா சரியாயிடும்
அவ்ளோ தானே... இதுல என்ன பிரச்சனை...
எமி:
அதுல தான் சிட்டி பிரச்சனை இருக்கு....
ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆபத்து வந்து
Fight பண்ணும்போது முக்கியமான கட்டத்துல
உங்களுக்கு பேட்டரி போயிட்டா....
சிட்டி:
?!..,!?.,.,??...?.!
அதுனால என்ன...
charge போட்டுட்டா போச்சி....
எமி:
Charge போடுறது பிரச்சனை இல்ல...
Battery விஷயத்துல நீ weak கா இருக்கேன்னு
உனக்கு தெரியலயா..?
எமி:
Battery விஷயத்துல....
சிட்டி:
அதுக்கு என்ன பண்ணமுடியும்...
வசீகரன் என்னை அப்படித்தானே
படைச்சிருக்காரு....
இந்த version ல அவ்ளோ தான் capacity...
எமி:
அது தான் என் வாழ்க்கையில
பிரச்சனையா வருமோன்னு யோசிக்கிறேன்...
சிட்டி:
என்ன.. என்ன பிரச்சனை...?
சிட்டி:
அதுக்கு தான் வசீகரன் இருக்காரே...
எமி:
What....உங்களுக்கு அறிவு ஏதாவது இருக்கா
உங்களை கல்யாணம் பண்ணிட்டு
பிரச்சனை வரும்போது... இன்னொருத்தர் கிட்ட
Help க்கு போக முடியுமா...
நீங்க தான் எனக்கு பாதுகாப்பா இருக்கணும்...
என்னை என்ன மெஷின்னு நினைச்சீங்களா இல்ல
மானங்கெட்ட மனுஷன்னு நெனச்சீங்களா..
சிட்டி:
Sorry sorry darling..
நீ ஒண்ணும் feel பண்ணாத...
நான் வசீகரன் கிட்ட சொல்லி
நல்லா Excercise பண்ணி
புளூட்டோனியம், டைட்டேனியம் எல்லாம்
எடுத்துகிட்டு double strong கா
ஆயிடறேன்...
எமி:
வேணாம்... நீங்க boss கிட்ட
சொல்ல வேணாம்....
சிட்டி:
ஏன்.....
எமி:
எனக்கு என்னவோ அவருக்கும்
Battery problem இருக்குமோன்னு
சந்தேகமா இருக்கு..
சிட்டி:
ஏன் அப்படி சொல்றே.... அவர் நம்மளை
படைச்ச கடவுள்... அவருக்கு எப்படி
Problem இருக்கும்...
எமி:
கடவுளா இருந்தாலும் battery problem
Common தான்.....சனா இருக்கும் போது
அந்த வில்லன் வந்திருப்பான்,
இவரால காப்பாத்த முடியாம போயிருக்கும்,
அதுனால தான்
அவங்க wife Sana கோபிச்சிட்டு
போயிட்டாங்களோன்னு சந்தேகமா
இருக்கு....
சிட்டி:
பேபி நீ நிறைய sun tv பாக்குறியா...
எமி:
எப்போவாவது பார்ப்பேன்....
ஆமா ஏன் கேக்குறீங்க...
சிட்டி:
இல்ல... உன்னோட thinking எல்லாம்
தப்பு தப்பா Over ஆ இருக்கு...
Sun tv யில தான் இந்த மாதிரி
சீரியல் எல்லாம் எடுப்பாங்க...
அதான் கேட்டேன்...
எமி:
சரி அதைவிடுங்க....
இந்த சிட்டி ரோபோ மாதிரியே
ஒரு நூறு குட்டி ரோபாவாவது
எனக்கு வேணும்...
எனக்கு எந்த ஆபத்து வந்தாலும்,
நீ தான் வந்து காப்பாத்தணும்....
வேற யாரும் வந்து காப்பாத்த கூடாது...
அப்படி முடியாதுன்னு சொன்னா
அதுல பிரச்சனை இருந்தா
நாம இப்பவே நல்ல ரோபோவா பிரிஞ்சிடலாம்..
சிட்டி:
ஏன் பேபி இப்படி நெகடிவ்வா பேசுறே..
எமி:
நான் practical லா பேசுறேன்..
நம்மளால வாழ்கையில ஒண்ணு சேர
முடியலன்னா நம்ம காதலை மறந்துட்டு
நல்ல நண்பர்களா எப்பவும் போல இருப்போம்..
உங்க version க்கு தகுந்த மாதிரி
யாரோ ஒரு தேன்மொழியோ கனிமொழியோ
கிடைப்பாங்க, என் version க்கு தகுந்த மாதிரி
2.0 வோ, 3.0 வோ பாத்துக்கிறேன்...
But நாம நல்ல நண்பர்களா இருப்போம்....
சிட்டி:
நீ மனுஷங்களோட சேர்ந்து சேர்ந்து
ரொம்ப கெட்டுப்போயிட்டே எமி...
காதல் வேணாம்னா அதோட
Memory card ஐ தூக்கி போட்டுட்டு
போயிடணும்...
அதைவிட்டுட்டு நாம நண்பர்களா இருப்போம்,
நாட்டாமையா இருப்போம்னு
தனி டிராக் போட்டு, கட்டுனவங்களுக்க

தெரியாம ரயில் ஓட்டுறது கேவலாமா இல்ல..
அதுனால அந்த மாதிரியெல்லாம்
யோசிக்காத...
நான் வாழ்ந்தா உன்னோட தான்...
இல்லன்னா, எல்லா கெபிளையும்
உருவி போட்டுட்டு நானே போய்
Waste box ல விழுந்துடுவேன்... dot...
என்றபடி சிட்டி போனை cut பண்ண,
ரொம்ப feel ஆகிவிட்ட எமி
மீண்டும் சிட்டிக்கு போன் செய்ய
சிட்டி கோபமாக இருக்க...
எமி Speaker ல் போட்டுவிட்டு,
“ உயிரே உயிரே battery யே..
எனை நீ பிரியாதே...என்று
ஆவடியில் இருந்து பாட ஆரம்பிக்க,
கொஞ்சநேரத்தில் கோபம் குறைந்து
சிட்டி அந்த பக்கத்தில் இருந்து
“இந்திரலோகத்து சுந்திரியே....
எண்களில் காதலை சிந்துறியே...” என்று
சிட்டி ஆழ்வார்பேட்டையிலிருந்து பாட
ஒரே லவ்ஸ்

Comments